“சப்கா சாத் சப்கா விகாஸ்” என்ற முழக்கத்தை (எல்லோருக்கும் எல்லாவற்றையும் கிடைக்கச் செய்வோம்) தொடர்ச்சியாக முன்வைக்கிறார் பிரதமர் மோடி. ஆனால் சிறுபான்மையின சமூக மாணவர்களின் கல்வி உரிமைகள் மீது மிக மோசமான தாக்குதல்கள் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதுதான், அத்துறைக்கு ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதியில் இருந்து தெரிய வருகிறது.
சிறுபான்மையினர் சமூக மாணவர்களுக்கு ப்ரீ மெட்ரிக் உதவித்தொகை வழங்க 433 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என 2023-24 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டது. அது 2024-25 நிதியாண்டில் 326.16 கோடி ரூபாயாகக் குறைந்தது. தற்போது நடப்பு நிதியாண்டில் (2025-26) 195.70 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. நிதி அறிவிப்பிலேயே இத்தகைய பாரபட்சத்தை பா. ஜ. க. அரசு நிகழ்த்தியிருக்கிறது என்றால், ஒதுக்கீடு குறித்த விவரங்கள் மேலும் அதிர்ச்சியைத் தருகின்றன. 2023-24 நிதியாண்டில் 95.83 கோடி ரூபாயும், 2024-25 நிதியாண்டில் 90 கோடி ரூபாயும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினர் கல்வி தொடர்பான 6 திட்டங்களுக்கு 2023-24 நிதியாண்டில் 1,689 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு, 428.74 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் 1,575.72 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 517.20 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டோ ஒதுக்கப்பட்டிருப்பதே 678.03 கோடி ரூபாய்தான் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உரிமை மீது கூட ஏன் இத்தனை வஞ்சனைப் போக்கு கல்வியாளர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சீமாருக்கு ஈரோடு தந்த செருப்படி
ஈரோட்டில் பெரியாரை இழிவுப்படுத்தி வாக்கு கேட்ட சீமார்கட்சி வேட்பாளர் டொபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளார். பதிவான வாக்குகளில் 70 சதவித வாக்குகளை பெற்றார் திமுக வேட்பாளர் வி. சி. சந்திரகுமார். நாதக வேட்பாளரை விட 90535 வாக்குகள் கூடுதல். கடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஈவிகே இளங்கோவன்பெற்ற வாக்குகளை விட இப்போது திமுகவுக்கு கூடுதல் வாக்குகள் அஇஅதிமுக, பாஜக தேர்தல் புறக்கணிப்பு செய்தன. ஆனால் 69. 67 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளனர்.
நாதகவுக்கு பாஜக மறைமுக ஆதரவு தந்தாலும் டெபாசிட் வாங்க முடியவில்லை. அஇஅதிமுகவின் பெரும்பான்மை வாக்குகள் திமுகவுக்கே விழுந்துள்ளன. சீமானை ஆதரிக்க வந்த அண்ணாமலையும் சீமான் பேச்சு “ஓவர், ஆபாசம்” என்று சான்றிதழ் வழங்கி விட்டார். பெரியாரை பழித்த சீமாருக்கு செருப்படி தந்ததுள்ளனர் ஈரோடு மக்கள்.
- விடுதலை இராசேந்திரன்