கல்புர்கி, கவுரி லங்கேசு இவர்களைக் கொன்ற துப்பாக்கியில் ஒரே ஒரு துப்பாக்கி. அது ஒரே வகை தோட்டா என்று இப்போது அறிக்கையிலே வெளி வந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து விசாரித்தால் அனைவரும் சொல்கிறார்கள் அமைப்பு ஒண்ணு இருக்குதுன்றான் என்னடா அமைப்பு? அப்படீன்னு கேட்டா, சனாதன, சன்ஸ்தா என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று.

அவர்கள் சாஸ்திர தர்மம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அந்த புத்தகத்தைப் படித்ததற்குப் பிறகு படித்தவன் யாரெல்லாம் இந்த சனாதன் தர்மத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை தீர்த்துக் கட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். ஏதோ சுதந்திரத்திற்குப் பின்பு தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்று நீங்கள் தயவு செய்து நினைக்க வேண்டும்.

சனாதனத்தைக் காப்பாற்றுவதற்காக கொலை. இந்தியர்களை மட்டுமல்ல பிரிட்டிஷார் மீதும் நடத்தியிருக்கிறார்கள்.

1912-இல் திருநெல்வேலியில் கலெக்டராக இருந்த ஆஷ் துரையை அங்கே இருக்கிற வாஞ்சிநாதன் என்ற குடுமி வைத்த பார்ப்பான் சுட்டுக் கொன்றான் எதற்காக கொன்றான்?

மணியாச்சி என்கிற ரயில்வே சந்திப்பிலே ரயிலுக்காக காத்திருக்கிறார். ஆஷ் துரை குடும்பத்துடன் கொடைக்கானல் செல்வதற்காக அந்த ரயிலில் அருக்கில் இருந்த செங்கோட்டையைச் சேர்ந்த குடுமி வைத்த பார்ப்பான் ஆஷ் துரையை நோக்கி சுட்டு விட்டு அங்கே இருக்கிற கழிவறையை நோக்கி ஓடி தன் தலையிலே சுட்டு இறந்து போகிறான்.

ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தான் அந்த கடிதத்திலேயே எதற்காக நான் கொலை செய்தேன் என்று விரிவாக எழுதி வைத்திருக்கிறான்.

அவன் சொல்லுகிறான், ‘இந்த ஆங்கிலேய சத்ருக்கள், இந்து சனாதன தர்மத்தை அழிக்கும் பொருட்டு அவர் பல்வேறு வேலைகளை செய்கிறார்கள்’ என்று எழுதி வைத்திருந்தான்.

இந்த நாட்டை இராமன் ஆண்டான், அர்ஜுனன் ஆண்டான், கிருஷ்ணர் ஆண்டான், கோவிந்தன் ஆண்டான், தர்மப்படி, சுதந்திரப்படி, இந்த சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது, இந்த சனாதன தர்மத்தை கேவலம் கோ மாமிசம் தின்கிற இந்த பஞ்சமன் ஜார்ஜ், இந்து சனாதன தர்மத்தைகாலில் போட்டு மிதிக்கிறான். சனாதன தர்மத்தை அந்த ஜார்ஜ் என்கிற அந்த பஞ்சமன் இந்தியாவிலே கால் வைக்கிற போது, அவனைக் கொலை செய்வதற்காக, மூவாயிரம் மதராசிகளை நாங்கள் தயாராக வைத்திருக்கிறோம்..

அவர்களில் கடைக்கோடியாக இருக்கக் கூடிய அந்த வாஞ்சி நாதன் என்கிற வாஞ்சி அய்யர் அவன் கடிதத்திலே எழுதி வைத்திருக்கிறான். இன்னும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது. பேராசிரியர் ஆ. சுப்பிரமணியன் என்கிற ஒரு வரலாற்று பேராசிரியர் அனைத்திலும் அதைப் பதிவு செய்திருக்கிறார்.

ஏன் ஆஷ் துரையை கொலை செய்தான்? அவன் ஆஷ்துரையை கொலை செய்தவனுடைய நோக்கம் என்ன?

நாமெல்லாம், குற்றாலத்துக்கு போகிறோம். இந்த குற்றாலத்தில் இப்போது எல்லோருமே குளிக் கிறோம். மக்கள் அனைவரும் இந்த இடத்திலே குளிப்பதற்கு உண்டான உரிமை இருக்கிறது.

பார்ப்பனர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில், குற்றாலத்தில் உழைக்கும் மக்களான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அந்த அருவியில் குளிப்பதற்கு அனுமதி கிடையாது.

ஆஷ் துரை வந்து பார்த்தார், ஏன்டா, மேல இருந்து தண்ணீர் வருகிறது, அந்த குழந்தை குளிக்கும்போது, இந்த குழந்தை ஏன்டா குளிக்கக்கூடாது என்று சொல்லிட்டு, அனைவரும் குளிக்கலாம் என்று அருவியில் குளிப்பதற்கு அவர் ஆணையிட்டார் அதனால்தான் வாஞ்சிக்கு அவ்வளவு கோபம் வருகிறது.

அதுமட்டுமல்லாமல் அங்கு இருக்கக் கூடிய செங்கோட்டை என்ற நகரத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார், பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது ஆஷ் துரை வண்டியில் வருகிறார், அந்தப் பெண்ணை ஒரு சாதாரண கட்டை வண்டியில் ஏற்றுகிறார்கள்.

எங்கே கொண்டு செல்வதற்கு, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு. அங்கே கொண்டு செல்வதற்கு கட்டை வண்டியில் ஏற்றும் போது, ஊரைச் சுற்றித்தான் கொண்டு செல்ல வேண்டும்,

ஆனால் குறுக்கே போனால் அரைக் கிலோ மீட்டரில் சென்று விடலாம். ஆனால் சுற்றிப் போனால் ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். ஆனால் கட்டை வண்டியில் கொண்டு போனால் எவ்வளவு நேரம் ஆகும்.

அந்தப் பெண் எவ்வளவு கஷ்டப்படுவார் என்பதை உணர்ந்த ஆஷ் துரையின் மனைவி தன் கணவனிடத்திலே சொன்னார், ஒரு பெண் அங்கே வலியால் துடித்துக் கொண்டிருக்கிறாள் அதைப் பார்த்துவிட்டு நாம் எப்படிச் செல்வது என்று கூறி அவர்களது காரில் ஏற்றிக் கொண்டு அக்கிரகாரத்து வழியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஒரு தாழ்த்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை அக்ரஹாரத்து வழியாக மருத்துவமனைக்கு கொண்டுப் போய்ச் சேர்த்தார் என்ற மாபெரும் குற்றத்திற்காகத் தான் ஆஷ் துரையை வாஞ்சி அய்யர் என்கிற பார்ப்பான் சுட்டுக் கொன்றான்.

அவர்களுக்கு வருணாசிரம தர்மம் என்பது காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான்.

அந்த வர்ணாசிரம தர்மத்தைத் தான் இப்போது ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வர்ணாசிரம தர்மத்தைத் தான் இங்கு இருக்கிற அர்ஜுன் சம்பத் மாதிரியான அல்லக்கைகளும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு தெரியாது, ஏனென்றால் சங்கராச்சாரியிடம் சமமாக நின்று பேசும் தகுதிகூட அர்ஜுனன் சம்பத்திற்கு இல்லை என்ற அடிப்படை அறிவுகூட அவருக்குக் கிடையாது. ஆனால் அவர்தான் சனாதன தர்மம் சிறந்த தர்மம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

சனாதனத்தை வலியுறுத்திப் பேசுகிற போக்கை ஆளுநர் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒரு ஆளுநர் ஒரு ஆட்சி தலைவராக இல்லாமல் ஆட்சியைக் கட்டுப்படுத்தக் கூடிய, ஆட்சியை கொண்டு செல்லக்கூடிய தலைவராக இல்லாமல் அரசியல் கட்சியின் தலைவராக சனாதன தர்மத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால் அவர் ஆளுநராக இல்லாமல் பிஜேபியின் மறைமுக தலைவராகத்தான் பார்க்க தோன்றுகிறது.

அவர் மசோதாக்களுக்கு கையெழுத் திடாமல் கிடப்பிலே வைத்திருக்கிறார், தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்தும் எத்தனையோ மசோதாக்களை கையெழுத் திடாமல் கிடப்பில் போட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மியால் இளைஞர்கள், தொழிலாளர்கள் சாகடிக்கப்படுகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று தடைச் சட்டம் ஒன்றை இயற்றினால் அந்த அந்த சட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் யாரை எதிர்த்து சட்டம் கொண்டு வருகிறார்களோ அந்த முதலாளிகளை அழைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார் ஆளுநர்.

உள்ளபடியே நமக்கு ஒரு சந்தேகம் ஏற்படுகிறது, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் அந்த விளையாட்டு நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக கொண்டு வந்திருக்கிறோம்.

ஆனால் அந்த சட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல், அந்த உரிமையாளர்களை அழைத்துப் பேசி விட்டு இந்த சட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். போகிற இடங்களில் எல்லாம் அரசியல் பேசுகிற பாங்கை அவர் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்.

அவரை வேண்டுமானால் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு பாஜகவின் தலைவராக அவர் வந்திருக்கலாம் என்றார் பிரபாகரன்.

(நிறைவு)

பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை.