கழகத் தோழர்களே! சமூக செயல் பாட்டாளர்களே! கண்காணியுங்கள்!

•             உயர்நீதிமன்றம் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு களுக்கு எதிராக ‘பிளாஸ்ட் ஆப் பாரிஸ்’ சுட்ட களிமண்ணால் சிலைகள் செய்யப்பட் டிருக்கிறதா?

•             வாகன விதிகளுக்கு எதிராக சரக்கு வாகனங்களில் ஆட்கள் கொண்டு வரப்படுகிறார்களா?

•             உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி அலறி, மாணவ மாணவிகளுக்கும் நோயாளிகளுக்கும் பொது மக்களின் அமைதி யான உறக்கத்துக்கும் ஊறு செய்கின்றார் களா?

•             சட்ட மீறல், விதி மீறல் களை கண்காணியுங்கள்!

காமிராக்களில் படம் பிடித்து முகநூலில் பரப்புங்கள்!

உள்ளூர் காவல்துறைக்கு புகார் மனுக்களை எழுத்துப் பூர்வமாக வழங்குங்கள்!

கவனம்; கவனம்; விரைந்து செயல்படுங்கள்!

வினாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக சென்னையில் பெரியார் கைத்தடி ஊர்வலம்

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் 19.08.2016 மாலை 5:30 மணியளவில் கழகத் தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. கலந்துரையாடல் கூட்டத்தில் வருகின்ற 28, 29, 30, 31  தேதிகளில் நடைபெறவுள்ள பரப்புரைப் பயணம், விநாயகர் ஊர்வல எதிர்ப்பு, பெரியார் கைத்தடி ஊர்வலம், விநாயகர் ஊர்வல முறைகேடு பற்றி சமூக வலைதளங் களில் கவனம் ஈர்த்தல் மற்றும் காவல்துறையில் மனு அளித்தல், அய்யா பிறந்தநாள் நிகழ்வுகள் என அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பற்றி விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.

சென்னை மாவட்ட பொறுப் பாளர்கள், பகுதி பொறுப்பாளர்கள், தோழர்களும் கலந்து கொண்டனர்.