குஜராத் மாநிலம் பஞ்ச மகால் மாவட்டத்தில் கஸ்தாபஞ்சன் என்ற கோயிலின் அனுமன் பக்தராக பாபுஜி என்பவர் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். “எங்கள் கோயிலில் சரஸ்வதி அனுமான் பூஜையில் வைத்து பூஜை செய்யப்பட்ட மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி தேர்வு எழுதினால் 8ஆம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை தோல்வியே இருக்காது” என்கிறது அந்த விளம்பரம்.  

ஒரு பேனாவின் விலை என்ன தெரியுமா? ரூ.1900/- இதையும் நம்பி பேனாவை வாங்க பெற்றோர்கள் கூட்டம் படை எடுத்துக் கொண்டிருக்கிறதாம். ‘சரஸ்வதியை வழிபட்டால் கல்விச் செல்வம் வந்து சேரும்’ என்று புராண காலத்தில் பார்ப்பனர்கள் மூடநம்பிக்கையை பரப்பினார்கள். சரஸ்வதிக்கு பூஜை போட்ட காலத்தில் ‘தற்குறிகள்’ நாடாகவே இருந்தது. இப்போது ‘அனுமன் பூஜை செய்த பேனா’ வந்திருக்கிறது.