பேராசிரியர் அருணன் எழுதிய ‘மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை’ நூலிலிருந்து.ஜோதிடம் ஓர்அறிவியல் என்று கதை விடுகிறார்கள்.இவர்கள் கொடுக்கிற கணக்குகளைப் போட்டுப் பார்த்துக்கிடைக்கிற பலன்கள் சரியாக இல்லை என்றாலோகணக்குப் போட்டவருக்கு - ஜோதிடருக்கு - ‘கடவுள் அருள்’ இல்லை என்று சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள்.‘ஜோதிடமும் ஒரு விஞ்ஞானமே’ என்பது மக்களை ஏமாற்றிஇதன்பால் இழுக்க சிலர் போடும் நாடகமே.எனினும் பலரது நெஞ்சங்களிலும் எழுகிற ஒரு கேள்விஎன்னவென்றால் ‘கிரகங்களின் அசைவுகளைக் கொண்டுதானே சோதிடம் கணிக்கிறார்கள்.

நாம் வாழுகிற இந்தபிரபஞ்சத்தில்தானே கிரகங்களும் சஞ்சரிக்கின்றன.அவற்றின் நிலை மாற்றங்கள் மனிதனை பாதிக்காதா?’ என்பதாகும். இது சற்று விரிவாக விசாரணை நடத்தவேண்டிய விஷயம். முதலில் கிரகங்கள் குறித்து இந்தஜோதிட வித்வான்கள் என்ன கூறுகிறார்கள் என்றுகேட்போம்.‘சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு,கேது என்று ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன.இவற்றின் சஞ்சாரத்தைக் கொண்டே ஜோதிடம்கணிக்கப்படுகிறது’ என்கிறார்கள்.

ஜோதிடத்தின் இந்த அடிப்படையே அறிவியலுக்குவிரோதமானது. சூரியன் ஒரு கிரகமே அல்ல. அது ஒருநட்சத்திரம். நட்சத்திரம் என்றால் அது பிரதானமாகஹைட்ரஜன் வாயுவால் ஆனது. ஒளியையும் வெப்பத்தையும் உருவாக்கவல்லது. ஒரு மாபெரும் அணு உலை என்றுசூரியனைக் கூறலாம். இதனைச் சுற்றி செல்லும் கிரகங்கள்அப்படி அல்ல. இவற்றிற்கு சொந்தமாக ஒளியைஉருவாக்கும் ஆற்றல் இல்லை. சூரிய ஒளியைத்தான்ஸ்பெஷல் நாடகப் பின்பாட்டுக்காரன்போல வாங்கிவிடுகின்றன. கிரகங்கள் சுழன்று வருவதோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது கதிரவன் அநேகமாக ஓரிடத்திலேயே இருப்பது எனக் கூறலாம். அதாவது சூரியன்தான் மையம்.அதைச் சுற்றித்தான் பல கிரகங்களும் சஞ்சாரம் செய்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு விஷயம். ஜோதிடத்தில் வரும் இந்தஒன்பது கிரகங்களில் பூமி இல்லையே கவனித்தீர்களா? விஞ்ஞானத்தின்படி பூமியும் ஒரு கிரகமே. அதுவும்சூரியனைச் சுற்றியே வருகிறது. பிறகு ஏன் அதை நமதுஜோதிட சிகாமணிகள் சேர்க்கவில்லை? காரணம், அந்தக்காலத்தில் பூமிதான் மையம் என்றும், அதைச் சுற்றியேசூரியன் வலம் வருகிறது என்றும் மனிதன் நம்பினான்.கண்ணில் கண்ட காட்சியே மெய்என்று நம்பினான்.கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்,தீர விசாரிப்பதே மெய்என்னும் ஞானம் அவனுக்குப்பின்னாளில் ஏற்பட்டது.

தீர விசாரித்த பின்உண்மையைத்தெரிந்து கொண்டான். தற்பொழுது பள்ளிப் பாடப்புத்தகத்தில் சூரிய மண்டலம் என்கிற குடும்பத்தில் சூரியனேதலைவன். அவனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது என்றுபோட்டிருக்கிறார்கள். ஆனால் சோதிட சாஸ்திரத்திலோஇன்னும் பூமிதான் மையம். அதைச் சுற்றி வரும் ஒரு கிரகம்தான் சூரியன்.இன்னொரு வேடிக்கையை நோக்குங்கள்.

ஜோதிட சாஸ்திரத்தில் வரும் ஒன்பது கிரகங்களில் சந்திரனும்ஒன்று. ஆனால் உண்மையில் சூரியனை மட்டும் சுற்றி வரும்ஒரு கிரகம் அல்ல சந்திரன். மாறாக பூமியைச் சுற்றி வரும்ஒரு துணைக் கிரகம் அது.ராகு, கேது என்று கிரகங்கள் உண்டு என்கிறார்கள்அல்லவா. அப்படி கிரகங்களே கிடையாது. என்ன செய்வார்கள் ஜோதிடர்கள்? ராகு, கேதுக்கள் நிழல் கிரகங்கள்.இவை பின்வந்த மஹரிசிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டனஎன்று கூறிசமாளிக்கிறார்கள். பின் வந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களாம்! ஏன் ஏற்றுக் கொண்டார்கள்?அதற்கெல்லாம் காரணம் கேட்கக் கூடாது.

பெரியவங்கதப்புச் செய்தால் அது பெருமாளே செய்ததுபோல.பூமிக்கு மெர்ககுரி (புதன்), வீனஸ் (வெள்ளி), மார்ஸ்(செவ்வாய்), ஜூபிடர் (வியாழன்), சாட்டர்ன் (சனி), யுரேனஸ்(விண்மம்), நெப்டியூன் (சேண்மம்) என்கிற எட்டுகிரகங்களே சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதாகமுதலில் அறியப்பட்டது. 1930இல் புளுட்டோ (சேணாகம்) என்கிற புதுக்கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.

1987இல் மேலும்இரண்டு கிரகங்கள் கண்டறியப்பட்டதாக சிலவானவியலார் அறிவித்தார்கள். இன்னும் அறியப்படாதகிரகங்கள் சூரியக் குடும்பத்தில் இருக்கக் கூடும் என்றே விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால்‘யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகிய கிரகங்கள் நமதுஜோதிட சாஸ்திரத்தில்சேர்க்கப்படவில்லை!’ஆக, இல்லாத கிரகங்களைச் சேர்த்தும், இருக்கிறகிரகங்களை விட்டுவிட்டும் ஜோதிட சாஸ்திரம்வகுத்திருக்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையேகோளாறாக இருக்கிறது. இப்படி விஞ்ஞான விரோதச்சிந்தனையில் தயாரிக்கப்பட்ட ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் தானாம். இந்தக் கூத்தை என்னென்பது!

Pin It