• தெரு ஓரத்தில் மக்களைக் கூட்டிதாயத்து விற்கும் மந்திரவாதிகளின் மோசடிகளைக்கூட நம்பிக்கொண்டிருந்தவர்கள் நாம். இந்தமோசடிகளை அம்பலப்படுத்திதிரைப்படங்களில்கூட காட்சிகள்வைக்கப்பட்டிருந்தன. ஒரு திரைப்படத்தில் நடிகர் மயில்சாமி தாயத்துவிற்பார். கூட்டத்தோடு கூட்டமாக தனது ஆளையே நிற்க வைத்து,பிறகு அந்த ஆளையே மந்திரத்தால் மயங்கி விழுந்தவர்போல நடிக்கவைத்து படுக்க வைப்பார். சூழ்ந்துநிற்கும் கூட்டம் பற்றி நன்றாகபுரிந்த அந்த ஆசாமியை படுக்கவைத்து உடலையும் முகத்தையும்துணியால் மூடி, மயில்சாமிகூட்டத்தினர் பற்றி கேள்வி கேட்பார்.

மயங்கி படுத்திருப்பதுபோல் நடிக்கும் ஆசாமியிடமிருந்து சட்டென்று பதில்கள் வரும்.வேடிக்கைப் பார்ப்பவர்கள்சட்டைப் பையில் உள்ள பணம்முழுவதையும் எடுத்து போடாவிட்டால் ‘இரத்தம் கக்கி சாக வேண்டி வரும்’ என்று மந்திரவாதிமிரட்டுவார். கூட்டத்தில் நிற்கும்நடிகர் வடிவேலு பையில் உள்ளபணம் முழுவதையும் போடாமல்10 ரூபாய்மட்டுமே போட,மயங்கிக் கிடக்கிற மனிதன், அந்தஆள் பணம் முழுவதையும் போடவில்லை என்று கூறுவான்.

பணத்தை முழுதும் பயந்துபோய்வடிவேலு போடுவார். கூட்டம்முழுதும், ‘இரத்தம் கக்கி செத்து விடுவோம்’ என்று பயந்து போய்போட்டப் பணத்தை கேட்காமலேகூட்டம் ஓடி விடும். வடிவேலுபோட்ட பணத்தை திருப்பிக்கேட்பார். அவர் முகம் முழுவதும்விபூதியை வீசி கண்களை மறைத்து,படுத்திருந்த ஆசாமியுடன் மந்திரவாதி மயிலுசாமி ஓட்டம்பிடிப்பார்.

அப்போது வடிவேலுகூறுவார்: “அப்ப மயங்கிப் போய்படுத்திருந்தவனும் அவங்கஆளுதானா?” - இப்படிப்பட்ட செப்படி வித்தைகளை நம்பிக்கொண்டிருந்த மக்களும்இருந்தார்கள். அறிவியல்ஓரளவுக்கு வளர்ந்த பிறகுதான்இப்படி செப்படி வித்தைக் காட்டும் மோசடிகள் குறையத் தொடங்கின.இப்போதும் முழுமையாக இந்தமோசடிகள் ஒழிந்துவிடவில்லை.

• ஒரு திரைப்படத்தில் வந்தமற்றொரு காட்சி இது: ஒருகுறிப்பிட்ட நாளில் ஒரு மலைக்குவரும் பக்தர்களுக்கு கடவுளைநேரே காட்டுவதாகக் கூறுவார் நடிகர் வடிவேலு. அதற்கு ஒருகட்டணம் நிர்ணயிப்பார்.கடவுளைப் பார்க்கும் ஆர்வத்தில்மக்கள் பணத்தையும் வாரி வாரிகொடுப்பார்கள். நடிகர் வடிவேலுகுறித்த நாளில் குறித்த நேரத்தில்மலையடிவாரத்தில் கடவுளைப் பார்க்க பணம் கொடுத்தவர்கள்கூடி நிற்பார்கள்.

‘கடவுள் வருவார்’ என்று கூறிக் கொண்டே இருப்பார்வடிவேலு. நேரம் ஆக, ஆக,கூட்டத்தில் ஒருவர், ‘என்னடா,ஏமாத்துற, கடவுளே தெரியல்ல’என்று கேள்வி கேட்கத் தொடங்கியவுடன், நடிகர் வடிவேலுவுக்குசட்டென்று ஒரு யோசனை வரும்.

“யார் உண்மையான பத்தினிக்குப்பிறந்தார்களோ அவர்கள் கண்களுக்கு மட்டும் கடவுள் தெரிவார்;இப்போது கடவுள் தெரிவாரே?”என்று கேட்பார். கூட்டத்தில்ஒருவர், “பேசாமல் கடவுள் தெரிகிறார் என்று கூறி விடுவோம்.

இல்லாவிட்டால் நமது பிறப்பையே சந்தேகித்து விடுவார்கள்”என்று கூறி, ‘கடவுள் தெரிகிறார்’என்று கூறியவுடன் கூட்டத்தினர்அனைவருமே, “ஆமாம்! ஆமாம்!கடவுள் தெரிகிறார்; நன்றாகபார்த்தோம்” என்று கூறிவிட்டுகலைந்து போவார்கள். இப்படிசமூகம் கட்டமைத்த உணர்வுகளைப் பயன்படுத்தி மக்களின்சிந்திக்கும் திறனை முடக்கி அறியாமையில் ஆழ்த்தியதை அக்காட்சி படம் பிடித்து காட்டியது.

• தனியார் பேருந்துகள் வெளியூர்களுக்கு புறப்படும்போது தேங்காய்உடைக்கிறார்கள். பேருந்துசக்கரத்தில் எலுமிச்சைப் பழத்தைவைத்து சக்கரத்தை அதன் மீதுஏற்றிய பிறகு பேருந்தை ஓட்டுநர்எடுக்கிறார். இப்படி எல்லாம் செய்தால் விபத்துகள் நிகழாதுஎன்று நம்புகிறார்கள். ஆனால்இந்தியாவிலேயேசாலை விபத்துகள்அதிகம் நடக்கும் மாநிலமாகதமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தேங்காய்உடைப்பதாலோ எலுமிச்சம் பழத்தின் மீது ‘டயரை’ஏற்றுவதனாலேயோ விபத்துகள் குறைந்துவிடவில்லை.

நடிகர்விவேக் ஒரு திரைப்படத்தில்இப்படி கேட்பார்: “வண்டிக்குள்இருக்கும் 250 பாகங்களில் ஓடாதவண்டியாடா, இந்த எலுமிச்சம் பழத்தாலே ஓடப் போகிறது?”இதுதான் அறிவியல் சிந்தனை.இப்படி சடங்குகளுடன் வாகனத்தை ஓட்டும் ஓட்டுனர்களில்சிலர் குடி போதையில் ஓட்டிவிபத்துக்குள்ளான செய்திகளும்வந்து கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கு எதிரான சடங்குகளும் நம்பிக்கைகளும்சமூகத்தைக் காப்பாற்றிடாது.

• நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒருதிரைப்படத்தில் காவி உடையுடன் பேய்ஓட்டும் மந்திரவாதியாகவருவார். மரணத்தின் விளிம்பில்நிற்கும் ஒரு மூதாட்டிக்கு ‘பேய்’பிடித்து விட்டதாகக் கூறிவடிவேலு ‘பேய்’ ஓட்ட வருவார்.மூதாட்டியின் உடலுக்குள் புகுந்து கொண்டிருந்த ‘பேயை’ வெளியேவா என்று உரத்தக் குரலில்மிரட்டுவார். ‘பேய்புகுந்த பாட்டி’“தன்னை இளம் வயதில் திருமணம்செய்து கொள்வதாக ஏமாற்றிஓடினான் ஒருவன், அவனோடுஇப்போது தனக்கு முதலிரவை நடத்த வேண்டும்; இல்லாவிட்டால்இறங்க மாட்டேன்” என்று ‘பேய்பிடித்த பாட்டி கூறுவார்.

கடைசியில் சீடனிடமிருந்துசாட்டையை வாங்கி பாட்டியை நோக்கி ஒரே ஒரு முறை சுழற்றிஅடிப்பார். உடனே பாட்டிமண்டையைப் போட்டு விடுவார்.கூட்டத்தினர் தன்னை துவைத்துஎடுத்து விடுவார்கள் என்றஅச்சத்தில் வடிவேலு திடீரெனஒரு ஏமாற்றுத் திட்டத்தை அரங்கேற்றுவார். “ஏய்பேய்,பாட்டியையே நீ கொன்றுவிட்டாயா? நீ எங்கே போனாலும்உன்னை சாகடிக்காமல் விடமாட்டேன்” என்று கூச்சல்போட்டுக் கொண்டேசாட்டையை சுழற்றிக் கொண்டு‘பேயை’ துரத்திக் கொண்டுஓட்டம் பிடிப்பார். கூட்டத்திலிருந்து தப்பிக்க அவர் இப்படி ஒருநாடகத்தைநடத்தினாலும்கூட்டத்தினரோ, “சாமியார்,எவ்வளவு நல்லவரப்பா... தனது

உயிரையே பணயம் வைத்துபேயை துரத்திட்டு ஓடுறாரு பாரு”என்று சாமியாரைப் பெருமையாகப் பேசுவார்கள். அப்போதுவடிவேலு ஓடிக் கொண்டேபேசுவார்: “இப்படிப்பட்டமுட்டாள் ஜனங்கள் இருக்குறவரைக்கும் எங்களுக்கு ஒருபிரச்சினையும் இல்லை.” மக்களின்அறியாமைதான் இப்படிப்பட்டசாமியார்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. மக்களும் வாழ்க்கையைத் தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

• பாம்பு கடித்துவிட்டால் உடனேமந்திரவாதியை அழைத்து வந்துவேப்பிலை அடித்து ‘மந்திரம்’ ஓதவைத்தால் விஷம் இறங்கிவிடும்என்றமூடநம்பிக்கையால் பலியான உயிர்கள் ஏராளம். பாம்புக்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவரிடம் உடனேகொண்டு போகவேண்டும் என்றுமக்களிடம் உணர்த்தியதால் மந்திரவாதியிடம் போகாமல்மருத்துவரிடம்போகும் நிலைஉருவாகியிருக்கிறது.

• பச்சிளம் குழந்தைகளை பூமிக்குள்குழித் தோண்டி புதைத்துமண்ணை மூடி பிறகு சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தையைவெளியே எடுக்கும் உயிருக்குஆபத்தான ஒரு சடங்கு சிலகோயில்களில் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசுஇந்த ஆபத்தான சடங்குக்கு தடை போட்டது.

• திருச்சி மாவட்டம் குளித்தலைவட்டத்தில் மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய்உடைக்கும் சடங்கு ஒன்றுஇப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. வாட்டசாட்டமாக சாமியாடிக் கொண்டே வரும் கோயில்பூசாரி, வரிசையாக அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பக்தர்கள்தலையிலும் தேங்காயை உடைக்கிறார். அவருடன் வரும் இளைஞர்கள் தேங்காய்உடைபடப் போகும் தலையை இறுக்கிப்பிடித்துக் கொள்கிறார்கள். இப்படிசளைக்காமல் ஆயிரத்துக்கும்மேற்பட்ட பக்தர்கள் தலையில்தேங்காய்உடைக்கப்படுகிறது.

முதல்முறை தேங்காய்உடையா விட்டால் இரண்டாம் முறைதலையில் உடைக்கிறார் பூசாரி.மண்டை உடைந்து இரத்தம்கொட்டினால், “தெய்வக் குத்தம்செஞ்சிருப்பாங்க; இல்லைன்னா‘சுத்தபத்தமா’ வந்திருக்கமாட்டாங்க” என்று காரணம் கூறி விடுகிறார்கள். பல்லாயிரக்கணக்கான நரம்பு மண்டலங்களைஉள்ளடக்கி உடலின் இயக்கத்தில்முக்கிய பங்கு வகிக்கும் ‘மனிதத்தலைக்கு’ ஆபத்துக்களை உருவாக்கும் இத்தகைய சடங்குகளைநமது மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல்சிந்தனை இருக்குமானால் இப்படி

‘ஆபத்து’களுக்கு ‘தலை’யைவிலையாகக் கொடுப்பார்களா?தொகுப்பு : இரா

Pin It