கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

cow 222பசுமாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் ‘சிப்’ கருவிகள், அணுக்கதிர் வீச்சு ஆபத்துகளைத் தடுக்கும் என்று கருநாடக அரசு அமைத்துள்ள ‘இராஷ்டிரிய காமதேனு ஆயோக்’ என்ற அமைப்பு அறிவித்திருந்தது.

கருநாடக அரசு இந்த ‘சிப்’களை தயாரிக்கும் வேலைகளையும் தொடங்க திட்டமிட்டிருந்தது. இது விஞ்ஞானபூர்வமாக சோதனை நடத்தப்பட்டு உறுதியாகியுள்ளதாக மேற்குறிப்பிட்ட அமைப்பின் தலைவர் வல்லபாகாய் கத்திரியா, கடந்த அக். 2020இல் அறிவித்திருந்தார். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

இந்தக் கூற்றுக்கு எந்த அறிவியல் சான்றும் கிடையாது என்று 600 விஞ்ஞானிகள் கூட்டாக கையெழுத்திட்டு மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கத்திரியாவுக்கு எழுதிய அந்த மறுப்பில் போலி அறிவியலைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த கத்திரியா - விஞ்ஞானிகள் மறுப்பு நகைப்புக்குரியது என்று கூறி தமது கருத்துக்கு சவுராஷ்டிரா பல்கலைக்கழக பேராசிரியர் மிதிர்ஜோஷி சான்று வழங்கியிருக்கும் கடிதத்தையும் இணைத்திருந்தார்.

இந்தப் பரிசீலித்த விஞ்ஞானிகள் அறிவியல் நடைமுறைகள் அத்தனையும் மீறி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பசுமாட்டு சாணம் அணுவீச்சுகளைத் தடுக்கும் என்று முடிவு செய்து கொண்டு அதற்கேற்ப சோதனைகளை வடிவமைத்து அறிவியலை கேலிக்குரியதாக்கியுள்ளது இந்த அமைப்பு என்று விஞ்ஞானிகள் உறுதியாக மறுத்துள்ளனர்.

                               ***

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம்

நிமிர்வோம் 17 ஆவது வாசகர் வட்டம், சென்னை தலைமை அலுவல கத்தில் 30.01.2021 அன்று மாலை 6 மணி யளவில் தொடங்கி நடைபெற்றது.

 தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் நாசர் புரூனோ, ‘சாதியின் குடியரசு’ என்ற புத்தகத்தை திறனாய்வு செய்து உரையாற்றினார். இறுதியாக திராவிட இயக்க ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை, திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா. அன்பரசன் விளக்கி உரையாற்றி னார். நிகழ்வை பெரியார் யுவராஜ் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார்.

- விடுதலை இராசேந்திரன்