ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகில் சாமுந்தா தேவி கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 210 பேர் நெரிசலில் சிக்கி மரணமடைந்து விட்டனர். டெல்லியில் குண்டு வெடித்தது என்றால் உடனே இந்து கோயில்களுக்கு - போலீஸ் பாதுகாப்பு. தமிழ்நாட்டுக் கோவில்களில் - பக்தர்கள் வருகையை கண்காணிக்க ரகசிய காமிராக்களை காவல்துறை அமைக்கப் போவதாக செய்தி.

கடவுள் சக்தி இப்படி சிரிப்பாய் சிரிக்குது. இந்த லட்சணத்தில இந்துக் கடவுள்களை புண்படுத்துவதாக ராம கோபாலன்கள் பெரியார் தொண்டர்கள் மீது பாய்கிறார்கள். இந்து முன்னணிகளே! உன் கடவுள் சக்தி புண்படுத்தாமல் இருக்க - கோயில் பாதுகாப்புக்கு நவீன கேமிராக்கள் - போலீஸ் பாதுகாப்புகள் வேண்டாம் என்று கூறுவாயா?