தமிழ்நாடு தாங்கலையே அம்மா - எல்லாந்
தலைகீழாய்ப் போதைடீ அம்மா
தமிழர்களின் தலையறுப்பாய் அம்மா - எந்தத்
தாயுன்தன் போலிருப்பாய் அம்மா
நீமதிக்க யார்இருக்கா அம்மா - மொத்த
நிலமேஉன் காலடியில் அம்மா
மாமனிதர் நாவலரு அம்மா - அவரே
மசிராத்தான் போனாரடி அம்மா
ஏமாற்ற இரட்டைஇலை அம்மா - நீ
எப்பவுமே தாமரைஆள் அம்மா
இராமனுக்குக் கோயில்கேட்ப அம்மா - அதுலே
எப்பவும்நீ வாஜ்பாயி அம்மா
கரசேவை போய்ச்செய்ய அம்மா - இங்கே
கடப்பாறை கொடுத்தவநீ அம்மா
நரபலியான் மோடிக்குத்தான் அம்மா - நீ
நல்லதுணை ஆயிபுட்டே அம்மா
சங்கரனை உள்ளவைச்ச அம்மா - இதைச்
சாதனைன்னு சொல்லமாட்டோம் அம்மா
சந்திரனும் சூரியனும் அம்மா - நீ
சரிண்ணாதான் உதிக்கணுண்டீ அம்மா
சாலைப்பணி யாளர்களை அம்மா - நீ
சாகடித்தாய் மறக்கலியே அம்மா
ஆளவைச்சு மிரட்டுவியே அம்மா - உனக்கு
ஆகாதுன்னா ஒழிச்சுடுவே அம்மா
ஆயிரமாய் ஆயிரமாய் அம்மா - அரசு
ஊழியரை அலைகழிச்சே அம்மா
தாயிண்ணுநீ சொல்லுறியே அம்மா - சிறைச்
சாலையிலே தள்ளுனியே அம்மா
திடீர்பல்டி வைகோவை அம்மா - நீ
தீய்ச்சகதை தெரியுமடீ அம்மா
பொடாவிலே மாட்டினியே அம்மா - மாட்டிப்
பட்டையைத்தான் கிளப்புனியே அம்மா
திராவிடத்துத் தாயாநீ அம்மா? - அய்யோ
தீயைவச்ச போலிருக்கே அம்மா
பேரைச் சொல்ல தகுதிவேணும் அம்மா - முன்னமே
பெரியாரும் போயிட்டாரு அம்மா
பொற்கால ஆட்சியில்லை அம்மா - இது
போர்க்கால ஆட்சியடீ அம்மா
நிற்கவச்சு ஒதைக்கப்போறே அம்மா - மறுபடி
நீவந்தா ஒழிஞ்சமடீ அம்மா!

Pin It