1. திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடத் தடை விதிக்கும் தீட்சதப் பார்ப்பனர்கள் - மொழித் தீண்டாமையைத் திணிக்கிறார்கள்.

2. கோயில் நுழைவுக்கு வந்த - தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நந்தன் - ‘தீயில் கலந்ததாக’ தீட்சதர்கள் அறிவித்து, தீயிட்டுக் கொளுத்தினார்கள். அந்த நந்தன் நுழைந்த, கோயிலின் தெற்கு வாயிலை சுவரெழுப்பி, மூடி - சாதித் தீண்டாமையையும் தீட்சதப் பார்ப்பனர்கள் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

3. திருச்சிற்றம்பலத்தில் மேடை ஏறி, திருவாசகம் பாடியதால் - கோயில் தீட்டாகிவிட்டது என்று தீட்சதப் பார்ப்பனர்கள் தீட்டுக் கழிக்க ‘பரிகாரம்’ செய்திருக்கிறார்கள்.

இந்தப் பச்சைப் பார்ப்பனத் திமிரை, நியாயப்படுத்தி, பா.ஜ.க. இல.கணேசன் மட்டுமல்ல, நேற்று முளைத்த காளான் - சரத்குமாரும் பேசியிருக்கிறார். காலம் காலமாய் கடைபிடிக்கப்பட்டு வந்த மரபுகளை மீறி, மாற்றங்களை கொண்டுவரக் கூடாது என்கிறார், இந்த நடிகர்! பார்ப்பனக் குரலை எதிரொலிக்க - தமிழினத்தில் மற்றொரு “துரோக சக்தி” பொது வாழ்க்கைக்கு வந்திருக்கிறது. இவர் நடத்துகிற கட்சிக்குப் பெயர் ‘சமத்துவ கட்சியாம்’ பார்ப்பானின் சாதி - மொழித் தீண்டாமையைக் கண்டிக்காமல், அதற்கு நியாயம் பேசுவதுதான், நீ பேசும் ‘சமத்துவமா’ப்பா?

ஏற்கெனவே - கலைஞர் தலைக்கு விலை நிர்ணயித்த - விசுவ இந்து பரிசத் நடத்திய ஆயிரம் விளக்கு பூசையிலும், சென்னையில் நடந்த சிங்களர் திரைப்பட விழாவிலும் சிறப்பு விருந்தினராக - சரத்குமார் மனைவி ராதிகா கலந்து கொண்டார். இப்போது சமத்துவக் கட்சித் தலைவரோ பார்ப்பனியத்தை வழி மொழிகிறார்!

தமிழர்களே! இனத்தின் கோடரிக் காம்புகளை அடையாளம் காணத் தவறாதீர்கள்!

காணிக்கை தராதீர்!

தமிழில் தேவாரம் பாடினால் தீட்டுக் கழிக்கும் திமிர் பிடித்த, தீட்சதப் பார்ப்பனர்களே!

உன் தட்டிலும், உண்டியலிலும் தமிழன் போடும் பணத்தைப் பொறுக்கும்போது தீட்டுப்படவில்லையா?

தமிழை - தமிழர்களை இழிவுபடுத்தும் தீட்சதர்களுக்கு - தமிழர்களே !

தட்டிலும் உண்டியலிலும் காசு போடாதீர்!

தமிழக அரசே! தில்லை நடராசர் கோயிலை கையகப்படுத்து!

பெரியார் திராவிடர் கழகம், (சிதம்பரம், கடலூர் மாவட்டம்)

(மேற்கண்ட சுவரொட்டிகள் - கழகத் தோழர்களால் கடலூர்-சிதம்பரம் மாவட்டம் முழுதும் ஒட்டப்பட்டுள்ளன)