அடிக்கிறான் அடிக்கிறான்
லட்ச லட்சமாய் அடிக்கிறான்
கல்வியில் அடிக்கிறான்
கொள்ளை அடிக்கிறான்

கேட்கிறான் கேட்கிறான்
லட்ச லட்சமா கேட்கிறான்
எம்.பி.பி.எஸ்.க்கும் கேட்கிறான்
எம்.எஸ்.ஸிக்கும் கேட்கிறான்
கேட்டரிங்குக்கும் கேட்கிறான்

ஆக்குறான் ஆக்குறான்
கடனாளியா ஆக்குறான்
கல்லூரியில் சேர்க்கும்போதே
கடனாளியா ஆக்குறான்

வாங்குறான் வாங்குறான்
அப்ளிகேசனுக்கும் வாங்குறான்
அட்மிசனுக்கும் வாங்குறான்
ஆஸ்டலுக்கும் வாங்குறான்

வாங்குறான் வாங்குறான்
பஸ்சுக்கும் வாங்குறான்
மெஸ்சுக்கும் வாங்குறான்

வாங்குறான் வாங்குறான்
கம்யூட்டருக்கு வாங்குறான்
அட கக்கூசுக்கும் வாங்குறான்

பழமொழிங்க பழமொழிங்க
கல்யாணம் பண்ணிப்பாருங்கிறது பழமொழிங்க
புதுமொழிங்க புதுமொழிங்க
கல்லூரியில் சேர்த்துப்பாருங்கிறது புதுமொழிங்க

அன்னைக்கு காசு வேணும்னா
கள்ளச்சாராயம் காய்சுனான்
இன்றைக்கு காசு வேணும்னா
கல்லூரிய நடத்துறான்

இடஒதுக்கீடு கேட்கும்போது
தகுதி திறமை போச்சுங்குறான்
லட்ச லட்சமா காசு கொடுத்தா
பெயிலானாலும் சேர்த்துக்குறான்.