இருந்தால் என் வைப்பாட்டி மகனாக இரு; இழிமகனாக இரு; இல்லாவிட்டால் நாட்டைவிட்டு, இந்து மதத்தை விட்டு வெளியேறு அல்லது ஜெயிலில் இரு” என்றால், “இது உங்கப்பன் உங்க அம்மா சம்பாதித்த நாடா? அவர்கள் பிறந்த நாடா? என் நாட்டில் உனக்கு என்ன வேலை? வெளியேறு, வெளியேறு, மான வெட்கங் கெட்டவனே, வெளியேறு” என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

சமுத்திரம் எனக்கு முழங்கால் அளவு தண்ணீர்தான்.

அட முட்டாள்களா! உங்களுக்கும் சேர்த்துத்தானே பாடுபடுகிறேன்.

விஷமப் பிரச்சாரம் செய்யும் உங்களில் ஒருவன் வாயில்கூட ‘நான் ஏன் சூத்திரன்’ என்பது வருவதில்லையே. டில்லியோடு எழவு எடுப்பதற்கு முன் உங்களோடு எழவு எடுக்க வேண்டியிருக்கிறதே!

தமிழன் யோக்கியதை எனக்குத் தெரியும். 75 வருடமாய் தெரியும். தமிழனுக்கு ஆக நான் பலிகடா ஆகிறேன்.

மானமுள்ளவர்கள் வாருங்கள். முடியாத யோக்கியர்கள், யோக்கியர்களுக்குப் பிறந்தவர்கள் வாலை அடக்கிக் கொண்டு யோக்கியமாய் வாழுங்கள்.

- தந்தை பெரியார்

Pin It