‘ஹிக்ஸ் போரான்’, ‘கடவுள் துகள்’ என்ற பெயர்கள் ஏடுகளில் அண்மைக்காலமாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் விண்வெளியிலிருந்து வெளி யேறும் ‘கதிர்கள்’ பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்தான். ‘ஹிக்ஸ் போரான்’ என்ற புதிய கதிர்வீச்சுக்கு சில நம்பிக்கையாளர்கள் கொடுத்த பெயர்தான் ‘கடவுள் துகள்’. மற்றபடி கடவுள் என்ற கற்பனைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது அண்மையில் ‘கருந் துகள்’ பற்றிய செய்தி வெளிவந் துள்ளது. விண்வெளியில் பல்லாயிரக் கணக்கான ‘விண்மீன்கள்’ கோடிக் கணக்கான கிலோ மீட்டர் தூரங் களில் ஒளியையோ அல்லது கதிர் களையோ வீசிக் கொண்டிருக்கும் போது பெரும்பாலான விண்மீன்கள், எவ்விதக் கதிர்களையும் வீசாமல், ‘அமைதி’யாகவே இருக்கின்றன. இது பற்றி ‘தினமணி’யில் (17.4.2013) வெளி வந்த ஒரு கட்டுரையில் “இந்த கருந் துகள்கள் கடவுளாக இருக்கலாம்; கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை, கடவுளைக் ‘கரிய மால்’ என்று அழைப்பது உண்டு. இந்த கருந்துகள் ‘கரிய மால்’ என்று நம்பப்படுகிறது” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. விஞ்ஞானம் விடை கண்டுபிடிக்காத ‘விண்வெளி’ மர்மங்களுக்கு கடவுள் முத்திரை குத்தி கடவுளைக் காப்பாற் றுவது சில “அறிவியலாளர்களின்” வழமை யாக இருந்து வருகிறது. இது குறித்து ‘ஜன சக்தி’ நாளேட்டில் (ஏப்.25)

ஒரு மறுப்புக் கட்டுரை வெளி வந்துள்ளது. கட்டுரையாளர் கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சார்ந்த தோழர் எஸ். தோதாத்ரி, ‘கருந்துகள்’ என்பது ஒரு பொருள். அப்படி யானால் கடவுளும் - ஒரு பொருளா? என்ற கேள்வியை எழுப்புகிறது அக் கட்டுரை. இப்படித்தான் சிவனும் சக்தியும், எல்க்ட்ரான் (எதிர் மின் சக்தி), புரோட்டான் (நேர் மின் சக்தி) என்று கூறி, தில்லை ‘நடராசனை’ ‘போகான்’ துகள்களோடு சில ‘ஆன்மிக திலகங்கள்’ ஒப்பிட்டுக் கொண்டார்கள். பார்ப்பன எழுத் தாளர் சுஜாதா ‘எலக்ட்ரான்கள்’ பற்றி நாலாயிர திவ்யபிரபந்தத்தி லேயே கூறப்பட்டிருக்கிறது என்றார். சர்.சி.வி.ராமன், புவிஈர்ப்பு விசையைக் கண்டறிந்த சர். அய்சக் நியூட்டன் உள்பட பல விஞ்ஞானி களிடம் இந்த ‘கடவுள்’ குழப்பம் இருந்தது. அவர் களின் உலகம் பற்றிய கண்ணோட் டம், பொருளைச் சார்ந்தது அல்ல. அது ஏதோ எல்லாவற்றிற்கும் அப் பாற்பட்ட பொருளுடன் தொடர் பில்லாத ஒரு சக்தி என்ற ‘கருத்து முதல்வாத’ப் பார்வையில் எழுந்த கோளாறுதான் இதற்கு அடிப் படையான காரணம். உயிர் என்பது எப்படி தோன்றியது? உயிரே இல்லாத திடப்பொருள்களிலிருந்து தோன்றியது என்பது தான் விஞ் ஞானம் தரும் விடை. கார்பன், ஹைட் ரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன் இவை நான்கும் கலந்து உருவான ‘புரோட் டோ பிளாசம்’ தான் முதலில் உருவான உயிர். இந்த புரோட்டோ பிளாசம் தான் ‘செல்’களாக மாறி, அதிலிருந்து வேறு வேறு செல்கள் பிரிந்து பல உயிர்கள் உருவாயின. ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியைக் கொண்டு பல மெழுகுவர்த் தியை கொளுத்துவதுபோல் தான் இது நடந்தது. ஜே.பி.எஸ். ஹால் டேன், ஏ.அய்.ஒப்பாரின் என்ற விஞ் ஞானிகள் இந்த விஞ்ஞான உண்மை களை விரிவாக எழுதியுள்ளனர்.

Pin It