பாலஸ்தீன விடுதலைப் போரட்டம், அதன் இலக்கில் முக்கிய கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் தனிநாடாக அறிவிக்கப்படாமலேயே அய்.நா.வில் பாலஸ்தீனம் ஒரு நாடாக (Non-Member Observer State) ஏற்கப் பட்டுள்ளது. இதனால் பாலஸ்தீன நாட்டுக்கான எல்லைகளை சர்வ தேசம் ஏற்றுள்ளது. இப்போது பாலஸ்தீனம் அய்.நா. பொதுக் குழு விவாதத்தில் பங்கேற்க முடியும். அய்.நா.வின் சார்பு அமைப்பு களில் பாலஸ்தீன பிரதிநிதிகள் பங் கேற்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இஸ்ரேல் மீது  போர்க்குற்ற விசாரணையை எடுத்துச் செல்லும் உரிமையும் கிடைத்துள்ளது. இந்த நீதிமன்றத்தில் வழக்குகளைக் கொண்டு செல்லும் நாடுகளுக்கான ஒப்பந்தத்தில் பாலஸ்தீனம் கையெழுத்திடலாம். பாலஸ்தீனத்திற்கு அய்.நா. ஏற்பு வழங்கும் தீர்மானம் இதேபோன்று கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வந்தபோது அதை அய்.நா.வின் பாதுகாப்புக் குழு ஏற்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இப் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 138 நாடுகளும் எதிராக 9 நாடுகளும் வாக்களித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ஏற்கவே 132 நாடுகளின் அங்கீ காரத்தை பாலஸ்தீனம் பெற்றுள்ளது.  பாலஸ்தீனத்தின் முன்னாள் காலனி நாடான பிரான்சு, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக திரும்பியுள்ளதும், எதிர் நிலை எடுத்திருந்த பிரிட்டன், ஜெர்மனி நாடுகள் எதிர்ப்பு தெரிவிக் காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காத நிலை எடுத்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

தீவிர இஸ்ரேல் ஆதரவு நாடான அமெரிக்கா, பாலஸ்தீனத்துக்கு எதிராகவே வாக்களித்தது. இந்தியா பாலஸ்தீனத்துக்கு ஆதரவு நிலை எடுத்துள்ளது.

1964 ஆம் ஆண்டு யாசர் அரபாத் தலைமையில் தொடங்கியது பாலஸ் தீன விடுதலை இயக்கம். உலகப் போரின் முடிவில் பிரிட்டன் காலனியாக பாலஸ்தினம் இருந்த போது அய்ரோப்பிய நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி, அங்கு பெரும்பான்மையாக இருந்த பாலஸ்தீன அரபுகளுக்கு எதிராக பிரிட்டன் ஆதரவுடன் 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிக் கொண்டனர். தொடர்ந்து இஸ்ரேல் பாலஸ்தீன போராளிகளுக்கு இடையே மோதல்கள், எல்லை ஆக்கிரமிப்புகள் நடந்தன. பின்னர் சர்வதேச தலையீட் டுடன் ஒப்பந்தங்களும் உருவாயின. 1993 ஆம் ஆண்டு உருவான ஓஸ்லோ ஒப்பந்தப்படி பாலஸ்தீனத்துக்கு வரை யறுக்கப்பட்ட சுயாட்சி உரிமை கிடைத்தது. இஸ்ரேல் இந்த ஒப்பந் தத்தை மீறி மீண்டும் பாலஸ்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து தாக்குதலைத் தீவிரமாக்கியது.

4 மில்லியன் பாலஸ்தீனியர்கள் அண்டையிலுள்ள சிரியா,லெபனான், ஜோர்டான் நாடுகளில் அகதிகளாக குடியேறினார்கள். சர்வதேச அழுத்தம் காரணமாக 2005 ஆம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியி லிருந்து வெளியேறியது. பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் தேர்தல் மூலம் காசா பகுதியில் ஆட்சிக்கு வந்தது. 2008 ஆம் ஆண்டு இஸ்ரேல் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மரணித் தார்கள். இந்த நிலையில் ஏற்கனவே அய்.நா.வில் பார்வையாளர் அந்தஸ்து பெற்றிருக்க பாலஸ்தீனம் (ஞயடநளவiநே ஹரவாடிசவைல), தனது நாட்டுக்கு ஏற்பு வழங்கும் தீர்மானத்தை முன்மொழிந்தது. ஆனால், அய்.நா. ஏற்கவில்லை. 2012 இல் இஸ்ரேல்-பாலஸ்தீனர்கள் மீது இரண்டு முறை காசா பகுதியில் விமானக் குண்டு வீச்சு தாக்குதல்களை நடத்தியது. ஹமாஸ் இயக்கத்தின் இரண்டாம் நிலை தளபதி அகமது ஜபாரி உட்பட 20 போராளிகள் கொல்லப்பட்டனர். 48 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இப்போது பாலஸ்தீனம், அய்.நா.வின் ஒரு நாடாக ஏற்கப்பட்டுள்ளது.  ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்குக் காலத்தை நிர்ணயிக்க இயலாது என்பதும், பல்வேறு அரசியல்களை சர்வதேச அளவில் கடக்க வேண்டி யிருக்கிறது என்பதையும் பாலஸ்தீன விடுதலை உணர்த்தியுள்ளது. ஈழ விடுதலைப் போராட்டமும் இப்படி நகர்த்திச் செல்லக் கூடிய நிலையில் இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

Pin It