சூடானிலிருந்து அண்மையில் விடுதலை பெற்ற நாடு தெற்கு சூடான்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வெளிப்படையாக ஆதரித்தது தெற்கு சூடான்விடுதலைப் படை. தெற்கு சூடான் விடுதலை விழாவிலும் நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். தெற்கு சூடான் விடுதலைக்குப் பிறகும் சூடானுக்கும் தெற்கு சூடானுக்குமிடையே எண்ணெய் வளத்தைப் பகிர்ந்து கொள்வதில் மோதல்கள் நீடித்தன. சூடானிலிருந்து விடுதலைப் பெற்ற தெற்கு சூடானில் 98 சதவீத எண்ணெய் வளப் பகுதிகள் இருந்தாலும் எண்ணெயை சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடிய துறைமுகப் பகுதி,

சூடான் வசம் தங்கிவிட்டது. தெற்கு சூடான் விடுதலைப் பெற்ற பிறகும், சூடானின் எண்ணெய் பிரச்சினையில் தெற்கு சூடான் மீது சூடான் தாக்குதலைத் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் மெகாபே இப்பிரச்சினையில் அன்னிய நாடுகள் தலையீடு இன்றி ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூடி சுமுகமாகப் பேசித் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். எத்தியோப்பியா நாட்டில் புதிய பிரதமராகியுள்ள ஹெய்லிமெரியான் டேசாலென் எத்தியோப்பா தலைநகர் ‘அடிஸ் அபாபா’வில் தனது அதிபர் மாளிகையில் சமரசப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகளை செய்தார். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இரு நாடுகளும் சமரச உடன்பாட்டை உருவாக்கிக் கொண்டன.

விடுதலைப் பெற்ற தெற்கு சூடான், தனது நாட்டுக்குள் உள்ள எண்ணெய் வளங்களை ஏற்றுமதி செய்வதற்கு சூடானிலுள்ள துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், சூடான் நாட்டுக்கு வெளிநாடுகளில் உள்ள 40 பில்லியன் கடனை அடைப்பதற்கு ஒரே கட்டமாக தெற்கு சூடான் 3.028 பில்லியன் டாலர் வழங்குவது என்றும், தொடர்ந்து இருநாடுகளும் கடன் வழங்கிய நாடுகளிடம் கடன் தொகையைக் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது என்றும் உடன்பாடு செய்யப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையே இராணுவ செயல்பாடுகளற்ற அமைதிப் பகுதிக்கான எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. ஆப்பிரிக்க நாடுகளுக்குள் எழும் பிரச்சினைகளை அய்.நா.வோ, மேலை நாடுகளோ தலையீடின்றி தங்களுக்குள்ளே தீர்த்துக் கொள்வோம் என்ற செய்தியை இதன் வழியாக ஆப்பிரிக்க ஒன்றியம் நிலைநாட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் ஈழ விடுதலையையும் வெளிப்படையாக ஆதரித்து வருபவர் தெற்கு சூடான் நாட்டின் அதிபா சல்வாகிர் மேயார்டிட். இவரது தலைமையில் தான் தெற்கு சூடான் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை நடத்தியது.

Pin It