இந்து பார்ப்பன ‘புண்ணிய பூமி’யில் தான் மனித மலத்தை மனிதன் சுமக்கும் இழிவு - சாதியின் பெயரால் நீடித்து வருகிறது. மலம் எடுப்பது, மலம் சுமக்கும் வேலைக்கு ஆள் எடுப்பது போன்ற இழிந்த வேலையை தடை செய்யும் சட்டம் 1993 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. சாக்கடைக் குழாய் மற்றும் கழிவு நீர்த் தொட்டி களில் மனிதர்கள் இறங்கி வேலை செய்வதைத் தடை செய்யும் வகையில் 1993 ஆம் ஆண்டில், நாடாளு மன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட் சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, இத் தீர்மானத்தைக் கொண்டு வந்து, இந்தியாவிலேயே தமிழ்நாடு சட்ட மன்றம் தான் இத் தீர்மானத்தை முதன்முறையாக நிறைவேற்றியுள்ளது என்று கூறியுள்ளார். மத்திய அரசு, 1993 ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்த இரண்டு மாநில சட்டமன்றங்களின் பரிந்துரை சட்டரீதியான அவசியமா கிறது. ‘உலர் கழிப்பறைகளை’ தடை செய்து சட்டம் இயற்றி 18 ஆண்டு களுக்குப் பிறகும், இப்போதுதான் அந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களைக் கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளன என்று, அமைச்சர் கூறினார். சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசிடம், சட்டத் திருத்தத்தத்தைக் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு அறி வுறுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றம், இத் தீர் மானத்தை நிறைவேற்றி, தலைமைச் செயலாளர் வழியாக, உயர்நீதி மன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

மேட்டூரில் கழகக் கூட்டம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் மரண தண்டனையிலிருந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி 22.8.2011 திங்கள் மாலை 6 மணிக்கு மேட்டூர் சதுரங்காடி திடலில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் மாவட்டத் தலைவர் கி. முல்லை வேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சூரியகுமார், மேட்டூர் நகர தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் முல்லைவேந்தன், ஜஸ்டின் ராசு ஆகியோர் உரைக்குப் பின், கழக வழக்கறிஞர் க. குமாரதேவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை நன்றி கூறினார். முன்னதாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் பகுத்தறிவு இனஉணர்வு இசை நிகழ்ச்சி எழுச்சியாக நடைபெற்றது. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேட்டூர் நகர தலைவர் பாஸ்கர், நகர செயலாளர் சம்பத் குமார், பொருளாளர் கதிரேசன், ஆசைத்தம்பி ஆகியோருடன் கழகப் பொறுப் பாளர்களும், தோழர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

சுயமரியாதை பேரவை தொடக்க விழா

குத்தூசி குருசாமி - குருவிக்கரம்பை வேலு சுயமரியாதைப் பேரவை தொடக்கவிழா 25.9.2011 மாலை 5 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் எல்.வி.ஆர். மேநிலைப் பள்ளியில் முனைவர் பொற்கோ தலைமையில் நடக்கிறது. விடுதலை இராசேந்திரன், க. திருநாவுக்கரசு, பேராசிரியர் அ. மார்க்சு, கழஞ்சூர் செல்வராசு, வாலாசா வல்லவன் உரை யாற்றுகிறார்கள்.

Pin It