சிற்பி இராசன் எழுதிய ஆரிய சுரண்டல் நூல் அறிமுக விழாவும், பெரியார் திராவிடர் கழக கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமும் தஞ்சாவூர் கொண்டிபாளையம் ரவுண் டானா அருகில் 9.5.2011 திங்கள் கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ப. ஆனந்தகுமார் தலைமை வகித்தார். சோலை மாரியப்பன் வே. பதி, ந. மனோ, அ. உதயகுமார், ப. ஞானவேல் ஆகியோர் முன்னிலை வகிக்க த. விக்னேசு வரவேற்புரையாற்றினார். கூட்டத் தின் தொடக்கத்தில் சிற்பி ராசனின் ‘மந்திரமல்ல தந்திரமே’ அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி புதியவன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கருத்துரையாற்றினர். ‘ஆரிய சுரண்டல்’ நூலை கழகத் தலைவர் வெளியிட, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். பேராவூரணி ஆனந்த், பெரியசாமி, மன்னார்குடி காளிதாசு, மயிலாடுதுறை மகேசு, கோகுல கண்ணன், தஞ்சை பசு. கவுதமன், தஞ்சை காமராசு, திருப்பூர் இராவணன், விழுப்புரம் பெரியார் வெங்கட், செ. பிரபு, க.இராமர், குப்பு வீரமணி உள்பட ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வே. அறிவுமதி நன்றி கூறினார். விழுப்புரம் ந. அய்யனார் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார்.

Pin It