இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக இலங்கை தமிழருக்கு ஆதரவு தெரிவிக்கவும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவும், 8.7.2011 வெள்ளிக்கிழமை, நாடு முழுவதும் ஒருமைப்பாட்டு தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மனித சங்கிலி, பொதுக் கூட்டம் ஆகிய வடிவங்களில் நடைபெற்றது. அன்று காலை 10 மணிக்கு சேலம் போஸ் மைதானம், மணிக்கூண்டு அருகில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக் குழு சார்பாக, தர்ணா போராட்டம் நடைபெற்றது. சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் ஆ.ஜீவானந்தம் தலைமையேற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி துவக்கி வைத்து உரையாற்றினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர் பிரச்சினையை கட்சியின் செயல் திட்டமாக ஏற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அக்கட்சியின் இளைஞர் மாணவர் அமைப்பு ஆக.26 ஆம் தேதி டெல்லியிலும் ராஜபக்சேவுக்கு எதிராக பட்டினிப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. திரிபுரா மாநிலத் தலைநகர் அகர்தலாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுரா மாநிலக் குழு ஈழத் தமிழர்களுக்காக பொதுக் கூட்டம் நடத்தியுள்ளது.

Pin It