கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, பிணையில்  வெளிவந்துள்ள காஞ்சிபுரம் ஜெயேந்திரனை ‘அவதார’மாக்கி விழாக்களை பார்ப்பனர்கள் எடுத்து வருகிறார்கள். சென்னை மயிலை சமஸ்கிருத கல்லூரியில் 3 நாட்கள் நடக்கும் விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். பார்ப்பான் கொலை செய்தால் அவனுக்கு முடியை வெட்டினாலே போதும். ஆனால், சூத்திரன் கொலை செய்தால் தலையையே வெட்ட வேண்டும் என்று ‘மனு தர்மம்’ கூறுகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரன், இப்போது மனு சட்டப்படிதான் நடத்தப்படுகிறாரே தவிர, இந்திய தண்டனைச் சட்டப்படி அல்ல. கலைஞர் கருணாநிதியின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையின் சாட்சிகள் ஜெயேந்திரனுக்கு ஆதரவாக பிறழ் சாட்சிகளாகிவிட்டன. 

கேதான் தேசாய் நினைவிருக்கிறதா? 

இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதான் தேசாய் என்ற பார்ப்பனர் லஞ்ச சூழலில் பிடிபட்டு கைது செய்யப்பட்டதை, அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்தியா முழுதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சீட் ஒன்றுக்கு ரூ.50 லட்சத்திலிருந்து கோடிகோடியாக லஞ்சம் வாங்கிய யோக்கியர். அவரது வீட்டில் நடந்த சோதனையில் தங்கம் கிலோ கிலோவாகவும், ரொக்கப் பணம் ஆயிரக்கணக்கான கோடிகளாகவும் கைப்பற்றப்பட்டதைக் கண்டு நாடே அதிர்ச்சியில் உறைந்தது. கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பார்ப்பனர் ஓசையின்றி பிணையில் வெளிவந்து விட்டார். அது மட்டுமா? குஜராத் பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட்டுள்ளார். மருத்துவப் பட்டதாரிகளுக்கான தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்த வேட்பாளரின் மனுவை கடைசி நேரத்தில் திரும்பப் பெற வைத்து எதிர்ப்பின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் நிலைக்கு வந்துவிட்டார் இதற்கான ஏற்பாடுகளை செய்து தந்தவர் குஜராத் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான பரிமாள் திருவேதி என்ற மற்றொரு பார்ப்பனர். 

உலக மகா ஊழலை அரங்கேற்றிய இந்த பார்ப்பனர், மருத்துவத் தொழில் செய்வதற்கே மருத்துவக் கவுன்சில் தடைவிதித்துள்ளது. மருத்துவர் என்ற முறையில் எந்த மருத்துவர் மாநாட்டிலும் அவர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தடைகளையும் புறந்தள்ளிவிட்டு, விதிகளுக்கு மாறாக, மருத்துவ பட்டதாரிகள் தொகுதியிலிருந்து செனட் உறுப்பினராகும் நிலைக்கு வந்துவிட்டார். செய்தி அறிந்து கொதித்துப் போன பல்கலைக்கழக மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த 24 ஆம் தேதி பல்கலைக்கழகத்தின் முன்பு கேதான் தேசாய்க்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். 48 மணி நேரத்தில் இந்தப் பார்ப்பனரின் செனட் தேர்வை ரத்து செய்ய கெடுவிதித்துள்ளனர். மருத்துவக் கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள பார்ப்பனரோ, கேதான் தேசாயை நீக்க முடியாது என்று அடம்பிடிக்கிறாராம்! இதுதான் இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு உள்ள வலிமை!

Pin It