கி. வீரமணி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது ரூ.27 லட்சம் விலை மதிப்புள்ள காரின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கி.வீரமணி, ‘விடுதலை’யில் வெளியிட்ட அறிக்கையை அதன் சிறப்பான ‘சுவை’ கருதி வெளியிடுகிறோம்.

“கழகத் தோழர்கள் பதற்றம் அடைய வேண்டாம். சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை நமக்கு உண்டு. ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என்பது போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கி விடக்கூடாது. பொது வாழ்க்கையில் இப்படிப்பட்ட துரோகங்களைச் சந்தித்துப் பழக்கப்பட்டவர்கள் நாம். அச்சுறுத்தல்கள் நம்மை ஒன்றும் செய்யாது. சாகத் துணிந்த நமக்கு சமுத்திரம் முழங்கால்கூட அல்ல. கணுக்கால் அளவே.

எனவே அமைதி காக்க வேண்டும் என்று அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். கலைஞர் அரசை காக்க வேண்டியதே நம்முடைய முதற்கடமை என்பதை மறவாதீர்!”

‘தொண்டருக்கும் தொண்டன்’ வீரமணி பயன்படுத்தும் காரின் விலை ரூ.27 லட்சம்

தகவல்: வீரமணியின் மேனேஜர் சீதாராமன் என்பவர் கூறியதாக ‘தினத்தந்தி’ நாளேடு (3.7.2010) செய்தி.

Pin It