இன்று......

“விளைந்த நிலைமையை எண்ணிப் பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு சகோதர யுத்தமே” காரணம்.

- கலைஞர் கருணாநிதி ‘முரசொலி’யில்

அன்று....

“‘ரா’ உளவு நிறுவனம்தான் இந்தக் குழப்பங்களை உருவாக்குகிறது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையே மோதலை உருவாக்குவதே ‘ரா’வின் நோக்கமாக இருக்கிறது. எனவே, இதில் பிரதமர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத் தமிழர் குழுக்களிடையே கடந்த காலங்களில் பல்வேறு குழுக்களிடையே பிளவுகளை உருவாக்கியதற்கு ‘ரா’ தான் காரணமாக இருந்தது.

“Raw which was responsible in the past for Creating divisions among various Tamil Groups of Srilanka was doing the same between the Centre and the State.”

- 8.5.1990 இல் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் கருணாநிதி

(ஆதாரம் : ஜெயின் ஆணைய அறிக்கை)

பல்வேறு குழுக்களையும் அவர்களிடையே பிளவுகளையும் உருவாக்கியதே - ‘ரா’ உளவு நிறுவனம் தான் என்று அன்று குற்றம் சாட்டியவர், இன்று விடுதலைப் புலிகள் மீது பழி போடுவது ஏன்? அன்று உளவு நிறுவனங்களின் வழியாக இதே ‘திருப்பணிகளை’ செய்த எம்.கே. நாராயணன்களுடன் கைகோர்த்துக் கொண்டிருப்பது ஏன்?

தமிழ்நாட்டு மக்களிடம் எழும், இந்த சந்தேகத்தை முதல்வர் விளக்குவாரா?

Pin It