தமிழ்த் தேசியம் பேசுகிறோம்,

தமிழ்மொழி வாழ்த்துப் பாடுகிறோம். ஆனால் தமிழ்ப் பெற்றோர்கள் புதுமை என்ற போர்வையில் தங்கள் பிள்ளைகளுக்கு அறம்புறம் சிதம்பரமாகப் பெயர் வைக்கிறார்கள். அவற்றை எங்கிருந்து பொறுக்குகிறார்களோ யாம் அறியோம். சமற்கிருத்த எழுத்துக்களான ஹ, ஸ்ரீ, ஜ, ஸ, ஷ போன்றவற்றில் பெற்றோர்களுக்கு அளவுகடந்த மோகம்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் ஒரு கவிதைப் போட்டி நடந்தது. அதில் பரிசு பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு இருந்தன:

அபிநயா, பிரதாயினி, நிறோசனா, கரஜன், டிலுக்கா, சத்யசனாதன், நிசாந்தினி, பவிசாயினி, அபிவர்மன், லோஜினி, ஜிஸ்ணுகா, தர்சினி, சோபிகா, நிலுக்ஷனா, ரானுகா, பாரதப்பிரியா, சுதர்ணியா, ஸ்ரீலங்கரூபன், ஜஸ்மிகா, ரானுகா, அபிவர்ணா, சரணியா, புஸ்பராசா, சிந்துஜா, சக்தீனா, யகிர்தா, நருமதா, கோஜியா, நவரூபன், தவேதன், மாதுரி, அஸவினா, ஹிருத்திக், மேருயா, பானுஜன், பிருந்தாஜினி, சாருஜா, ஹிசோன்.

இரண்டே இரண்டு பெயர்கள் மட்டும் தமிழில் இருந்தன. தமிழ்வாணி, தமிழினி!.

தகவல்: ஐயா நக்கீரன்

Pin It