குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது அறிவியல். நான்கு கால்களில் நடந்து கொண்டும் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டும் வாழ்ந்த குரங்கினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியுற்று வந்த ஆதிகால மனிதன் இரண்டு கால்களை மட்டும் உபயோகித்து நிமிர்ந்து நின்றான். நடந்தான்.

knee painஅவளுடைய முழு எடையையும் இரு கால்களின் மூட்டுகள் மட்டுமே தாங்கின. அதாவது இடுப்பு பந்துக் கிண்ண மூட்டு, முழங்கால் மூட்டு மற்றும் கணுக்கால் மூட்டு ஆகியவை இங்கே இருந்து தான் கால்களில் மூட்டு தேய்வதும் ஆரம்பித்து இருக்க முடியும் என்று தொன்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிறுவுகிறார்கள்.

மூட்டு தேய்மானம் (Osteo Arthitis) என்பது பாதிக்கப்பட்ட மூட்டு காலப்போக்கில் தேய்ந்து எலும்பின் மேல் உராய்வை தடுக்கும் பாதுகாப்பு கவசம் என்னும் (Joint Cartilage) முதலில் தேய்ந்து பின் எலும்பின் மேல் எலும்பு உரைவதால் ஏற்படும் மூட்டு அசைவு குறைவு, தசைகள் இறுக்கம் மற்றும் நாட்பட்ட வலியே ஆகும்.

மூட்டு தேய்மானம் அதிகமாக முழங்கால் (Knee) அடுத்து இடுப்பு (Hip) மற்றும் கணுக்கால் (Ankie) மூட்டுகளைப் பாதிக்கிறது.

காரணங்கள்

  1. அதிக வயதான இரு பாலருக்கும்
  2. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்க்கு (பெண்களுக்கு முக்கியமாக)
  3. பாழ்பட்ட மூட்டு சவ்வு (விளையாட்டு/விபத்தினால்)
  4. உடல் உழைப்பின்மை
  5. எலும்புகளின் வடிவத்தில் மாற்றம்

மூட்டு தேயாமல் தடுக்க

  1. வாழ்வியல் முறை மாற்றங்கள்
  2. சிகிச்சை முறைகள்

வாழ்வியல் முறை மாற்றங்கள்

  1. உடற்பயிற்சி : அன்றாடம் தசைகளை வலுப்படுப்படுத்தும் படி

நடைப்பயிற்சி : ஏற்கனவே மூட்டு தேய்ந்து அவதிப்படுவோர்க்கு மேலும் வலியையே கொடுக்கும் அதற்கு மாற்றாக மிதிவண்டி மிதித்தல் (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) நின்ற இடத்திலே செய்யும் உடற்பயிற்சிகள் (Standing Aerobics) செய்யலாம்.

Aqua Walking என்று சொல்லப்படும் நீச்சல் குள நடைப்பயிற்சி மூட்டு வலியின்றித் தண்ணீரில் நடப்பது என்பது தற்போது மேலை நாடுகளில் பிரபலமாகிவருகிறது.

  1. உடல் எடை பராமரிப்பு : BMI என்னும் ஆரோக்கிய உடல் எடை மதிப்பீடு மூலம் ஒப்பிட்டு சரியான உடல் எடையை உயரத்திற்கு தகுந்தாற்போல் பராமரித்தல்.
  2. உணவு முறை மாற்றங்கள் : உணவு முறை கலந்தாய்வு (Diet counselling) மூலம் உணவுப் பழக்க வழக்கங்களை மாற்றி அமைத்து உடல் எடை குறைப்பு மற்றும் சத்தான உணவு வகைகளை சரியான அளவில் உண்பது போன்றவை.

மூட்டு தேய்மானம் - சிகிச்சை முறைகள்

கவனமாகkf புரிந்து கொள்ளவும். மூட்டு தேய்மானம் என்பது வயது முதிர்வினால்/ அதிக உடல் எடை/ மாறிவிட்ட எலும்புகளால் மூட்டு தேய்ந்து அதனால் வலி உண்டாவதே ஆகும். இதனை மேலும் தேயாமல் கட்டுப்படுத்த முடியுமே தவிர எந்த ஒரு மருத்துவமும் சரிப்படுத்தி விட்டோம் என்று கூற இயலாது. வயது அதிகமாகும் போது மேலும் மூட்டு தேயவே வாய்ப்புகள் அதிகம்.

உடல் எடை குறைப்பு, மூட்டு சத்து மருந்துகள், உடற்பயிற்சி என அனைத்தும் தேய்மானத்தைக் கட்டுப்படுத்தவோ அல்லது அதன் வேகத்தைக் குறைக்கவோ பயன்படும். வலி மருந்துகள் அப்போதைக்கு வலி நிவாரணம் அளிக்கும். ஆனால் பக்க விளைவுகள் கருதி அடிக்கடி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

மூட்டு எலும்பு சீரமைப்பு (Osteotomies) அறுவை சிகிச்சைகள் இயற்கையான மூட்டினை மறு சீரமைப்புச் செய்து சில வருடங்கள் அதிகமாக நமக்கு வலியின்றி பயன்படுமாறு செய்ய உதவுகின்றன.

மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை (Knee Replacement) இறுதிக்கட்ட முயற்சியாக நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், வீட்டிலேயே முடங்கி விடாமல் வலியின்றி வாழவும் வழி செய்கிறது.

மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை என்பது ஒருவரின் மூட்டை அப்படியே மாற்றி விடுவது அல்ல. மூட்டின் மேல் பகுதியில் உராயும் பகுதியை மட்டும் எடுத்து விட்டு உயர்தர உலோகம் மூலம் செய்யப்பட்டக் கவசம் பொருத்துவதே ஆகும். இதனால் மூட்டின் உராய்வு தடுக்கப்பட்டு நோயாளிகள் வலியின்றி அசைக்கவும் நடக்கவும் இயலும். இழந்த தங்கள் சமூக வாழ்வை மீட்டெடுக்கவும் முடியும்.

Pin It