சில தினங்களுக்கு முன்பாக மாயவரத்தில் மும்மூர்த்திகள் வந்து சபை கூடி ரகசிய யோசனைகள் செய்து முடிவான தீர்மானங்கள் செய்து கொண்டு போயிருக்கிறார்கள். அவர்கள் 1. ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் 2. சட்ட மெம்பர் சர்.சி.பி. ராமசாமி ஐயர் 3. அட்வகேட் ஜெனரல் கனம் வெங்கட்டராம சாஸ்திரியார் ஆகிய மூவருமேயாகும். இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து தற்கால நிலைமையில் பிராமணர்கள் எப்படி உத்தியோகங்கள் பெறுவது, பிராமண வக்கீல்கள் இனி எப்படி பிழைப்பது, பிராமணரல்லாதார்களை ஏய்ப்பதற்கு வழியென்ன என்று யோசித்து முடிவு செய்துகொண்டு போயிருக்கிறார்களென்றே நினைக்கிறோம்.எல்லாம் ரகசியத்திலேயேயிருக்கிறது. குதிரை எப்பொழுது முட்டையிடுமோ பார்ப்போம்.

(குடி அரசு - செய்தி விளக்கம் - 02.05.1926)

 

Pin It