இந்தியாவுக்குப் புதிதாக ஒரு கவர்னர் உத்தியோகம், ஒரு லார்ட் பட்டம், ஒரு ரைட் ஆனரபிள் பட்டம் ஆக மூன்று புதுமைகள் இறக்குமதி ஆகிவந்தது. அந்த மூன்றும் பிராமணர்களுக்கே போய்விட்டது. அதாவது ளு.ஞ. சின்னா, லார்ட் சின்னா, ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரி ஆகிய மூன்று பிராமணர்களுக்கும், பிளேக்கோ, இன்புளுவென்சாவோ, எக்ஸ் சேஞ்சு நாணயமாற்றுப் பஞ்சமோ முதலிய புதுவியாதிகள் இறக்குமதி யானால் அது முழுமையும் பிராமணரல்லாதாருக்குத்தான் கிடைக்கிறது. பிராமணரல்லாதாரின் பாக்கியமே பாக்கியம்.

(குடி அரசு - பெட்டிச் செய்தி - 02.05.1926)

Pin It