மங்கலமான மஞ்சளின் மகிமையைப் பற்றி சொல்வதற்கொன்றுமில்லை. அனைவரும் அறிந்ததுதான். மஞ்சள் நல்ல கிருமி நாசினி என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். கேன்சர்க் கட்டிகளைக் கரைக்கும் வல்லமையும் இதற்கு உண்டு என்பது அண்மையில் தெரியவந்துள்ளது. சென்னை ஐஐடி ஆய்வுக்கூடத்தில் பணியாற்றிவரும் டாக்டர் கருணாகரன் இதுபற்றி நிறைய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இது ஒருபக்கமிருக்க மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் அய்யலுசாமி ராமமூர்த்தி என்பவர் மஞ்சளில் உள்ள குர்க்குமின் (இலத்தீனில் மஞ்சளுக்கு குர்க்குமா என்று பெயர்) என்ற மருந்துப் பொருளின் நிஜமான பணியைக் கண்டுபிடித்திருக்கிறார்.

குர்க்குமின் ஒரு சட்டாம்பிள்ளை போல செல்களின் சவ்வில் உட்கார்ந்துகொண்டு அதட்டி வேலை வாங்குகிறதாம். சவ்வு உறுதியாகவும் செம்மையாகவும் வேலை செய்யும்படி மேற்பார்வை செய்கிறதாம். இதனால் செல்லின் கிருமி எதிர்ப்புத் திறன் பல மடங்கு அதிகமாகிறது என்கிறார். ஆதலினால் மகளிரே முகத்திற்கும் உடலுக்கும் மஞ்சள் பூசுங்கள்.

- முனைவர். க.மணி

Pin It