கீற்றில் தேட...

பால் கெட்டுப்போவதற்குக் காரணம் அதில் உள்ள சர்க்கரையை காற்றில் உள்ள நுண்ணிய பாக்டீரியாக்கள் தின்று அழித்து விடுவதுதான். இதைத் தவிர்க்க பாலின் நிலையை எந்த குளிர்நிலை அல்லது கொதி நிலையில் வைத்தால் பாக்டீரியாக்கள் அவற்றை அணுகாது என்பதை லூயி பாஸ்டர் கண்டுபிடித்து வெளியிட்டார். அதன் அடிப்படையில்தான் தற்போது பாக்கெட் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை நினைவுபடுத்தவே பால் பாக்கெட்களில் ‘பாஸ்டரைஸ்டு மில்க்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.