man_300_copyபோட்டோவை விட வீடியோவில்தான் நமது முகபாவங்கள் தெளிவாகப் புரிகிறது. வீடியோவில் உருவம் நொடிப் பொழுதுக்குள் மாறிவிடுகிறது ஆனால் போட்டோவில் எத்தனை நேரம் வேண்டுமானாலும் நம்மால் உருவத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்க முடியும். எனினும் முக பாவத்தைச் சரியாக அறிந்து கொள்ள அசைவுகளே உதவுகின்றன; அசையாத போட்டோ மூலம் குழப்பம்தான் அதிகமாகிறது என்று மேக்ஸ் ப்ளாங்க் கழகம் தெரிவிக்கிறது.

பேச்சை விட மனிதன் அதிகமாக உடலின் தோரணை, முகபாவங்கள் மூலமாகத்தான் தன் கருத்தை தெளிவாகத் தெரிவிக்க முடிகிறது. ஆமாம், இல்லை, கோபம், வெறுப்பு, பயம், தயக்கம், ஏற்பு போன்ற மன உணர்வுகளை, வார்த்தைகளைவிட முகபாவங்கள்தான் உண்மையில் தெளிவாக உணர்த்துகின்றன. அவை உடல் அசைவுகளுடன் கலந்திருந்தால் தான் மேலும் நன்றாகப் புரிகின்றன.

ஒரே முகபாவத்தை புகைப்படம் மூலமும் பின்பு வீடியோ மூலமும் காட்டியபோது வீடியோ மூலம் காட்டினால் நன்றாகப் புரிகிறது என்று பலரும் தெரிவித்தனர். குறைந்தது 100 மில்லி செகன்ட் நேரமாவது திரையில் உருவம் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It