ஹோமெரின் சிரிப்பு (Homeric Laughter) என்றால் என்ன? அது எப்படிப்பட்டது!

Homer என்ற கிரேக்க கவிஞர் தனது Iliad and Odyssey என்ற படைப்பில் தொன்மையான கிரேக்க வரலாற்றைப் பற்றிய செய்திகளை எழுதியிருக்கிறார்.

வெவ்வேறு நபர்கள் நகைச்சுவையின் போது வெவ்வேறு வகையாகச் சிரிப்பார்கள்.

கலைவாணர் N.S.கிருஷ்ணன் 'ராஜாராணி' திரைப்படத்தில்,

'சிரிப்பு
அதை சீர்தூக்கிப் பார்ப்பதே   
நமது பொறுப்பு

மனம் கருப்பா வெளுப்பா என்பதைக்
காட்டும் கண்ணாடி சிரிப்பு -அது
கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு

பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப்
பல் இளிப்பதும் ஒருவகைச் சிரிப்பு         

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு - வேறு
ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு

இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு'

என பலவகையான சிரிப்புகளை தனது பாடலில் தன துணைவியார் T.A.மதுரத்துடன் பாடியிருக்கிறார். 'இது சங்கீதச் சிரிப்பு' எனப் பாடிச் சிரிப்பது பார்க்க, கேட்க மிகவும் நீண்டதாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்.   

ஹோமெரின் சிரிப்பு என்பது மிகச் சப்தமாக, அடக்க முடியாமல்  சிரிப்பதாகும். இத்தகைய சிரிப்பு மிக நீண்டதாகவும், முழு உடலே குலுங்குவதாகவும் அமையும். பானை போன்ற வயிறு குலுங்கக் குலுங்கச் சிரிப்பதாகவும் இருக்கும்.

ஹோமெர் எழுதிய கதைகளில் வரும் கடவுளர்களும் வயிறு குலுங்கச் சிரிப்பதாகத்தான் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்பாணியைப் பின்பற்றித்தான் தொலைக்காட்சியில் வரும் பிரபல கதாபாத்திரமான 'Simpsons' என்பவரும் சிரிப்பதாகக் காட்டப்படுகிறார்.

எனவே நாமும் சிரிப்போம், சிந்திக்க வைப்போம்.

பிறரைப் புண்படுத்தாமல் மற்றவரையும் சிரிக்க வைப்போம்.

சிரிப்பு உடல் நலத்திற்கான மாமருந்தாகும். (Laughter is the best medicine for good health)

சிரிப்பும் மகிழ்ச்சியும் அனைவருக்கும் நல்ல உடல் நலம் தரும்.

Pin It