• உங்கள் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இடஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

• தாழ்த்தப்பட்ட அருந்ததியினர் மற்றும் சிறுபான்மையினரின் உள் ஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

• உங்கள் கல்லூரியில் நிரந்தரப்பேராசிரியர் தேர்வு செய்வதில் 69 சதவீத இட ஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

• உங்கள் கல்லூரியில் அலுவலகப் பணியாளர் தேர்வு செய்வதில் 69 சதவீத இடஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

• உங்கள் கல்லூரியில் தற்காலிகப் பேராசிரியர், வருகைப் பேராசிரியர், தற்காலிகப் பணியாளர் தேர்வுகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு நிரப்பப்பட்டதா?

• உங்கள் கல்லூரியில் முக்கியப் பதவிகளில் சாதிவாரி சுழற்சிமுறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா?

• உங்கள் கல்லூரியில் SC/ST Cell செயல்படுகிறதா?

• உங்கள் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கண்காணிக்கும் Women cell செயல்படுகிறதா?

• அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக எந்தெந்த வகையில் கட்டணம் வசூலிக்கின்றனர்?

• உங்கள் கல்லூரியில் Complaints cum Redressal Committeeஉள்ளதா?அதில் 50 சதம் பெண் உறுப்பினர்கள் உள்ளனரா?

• உங்கள் கல்லூரி வளாகம் 10 ஏக்கர் அளவு உள்ளதா? அதில் கட்டிடங்களின் பரப்பளவு 2 . 5 ஏக்கர் உள்ளதா?

• 30 மாணவர்களுக்கு 250 சதுர மீட்டர் என்ற அளவில் (Lab) ஆய்வுக்கூடங்கள் உள்ளதா?

•  30 மாணவர்களுக்கு 900 சதுர மீட்டரில் (Work shop) பணிமனை உள்ளதா?

• எம்.சி.ஏ மாணவர்களின் ஆய்வுக்கூடம் 30 மாணவர்களுக்கு 150 சதுரமீட்டர் என்ற அளவில் உள்ளதா?

•   240 மாணவர்களுக்கு 400 சதுரமீட்டர் என்ற அளவில் நூலகம் உள்ளதா?

• வகுப்பு அறைகள் (Class Rooms) ஒவ்வொன்றம் 66 சதுரமீட்டர் உள்ளதா?

•    175 சதுர மீட்டர் அளவுகொண்ட Drawing Hall எத்தனை உள்ளது?

• விடுதி அறைகள் 3 மாணவர்கள் தங்கும் அறை (Triple seated room) 20 சதுர மீட்டர் உள்ளதா? ஒரு மாணவர் தங்கும் அறை (Single room) 9 சதுரமீட்டர் உள்ளதா?

•  120 மாணவர்களுக்கு ஒரு விடுதி என்ற அளவில், ஒவ்வொரு 120 மாணவர்களுக்கும் தனித்தனியே விடுதிகள் உள்ளனவா?

• உங்கள் கல்லூரியின் மொத்த விடுதி மாணவர் எண்ணிக்கை எவ்வளவு?“விடுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

•120 மாணவர்களுக்கு 200 சதுர மீட்டரில் சமையல் அறை மற்றும் டைனிங் ஹால் உள்ளதா?

• ஒரு மாணவருக்கு 0.25 சதுரமீட்டர் என் அளவில் Students activity centre உள்ளதா?

•  100 மாணவர்களுக்கு 10 கழிவறைகள் உள்ளதா?

• கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அண்ணா பல்கலைக்கழகங்கள் முதலில் தங்கள் வளாகத்தில் உள்ள கல்லூரிகளில் இந்த வசதிகளைச் செய்துள்ளனவா?

அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மேற்கண்ட வசதிகள் அடிப்படை அவசியமாக இருக்கவேண்டுமென AICTE தரநிர்ணயக்குழு அறிவித்துள்ளது. இந்த அடிப்படை வசதிகள் தங்கள் பகுதிக் கல்லூரிகளில் இருக்கிறதா என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகக் கேள்விகளை அனுப்பி பதிலைப் பெறுங்கள். அனைத்துக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் பதிவு அஞ்சலில் கேள்விகளை அனுப்புங்கள். இவைபோன்ற அடிப்படை வசதிகளே இல்லாத கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், பதிவாளர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், கல்லூரிகளின் அங்கீகாரத்தை நிறுத்துவதற்கும் முதற்கட்டமாக புள்ளி விபரங்கள் சேகரிப்பு மிகவும் அவசியம்.

 (பெரியார் முழக்கம் ஜனவர் 2011 இதழில் வெளியானது)

Pin It