ரயில் பயணிகளுக்கான சலுகைகள்

ரயில்வே மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி 2011- 12ம் ஆண்டுக்காக, 25.02.11ல் சமர்ப்பித்த பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம், சீசன் டிக்கட் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகிய வகையில் உயர்வு இல்லை.

(2008 - 09 ரயில்வே பட்ஜெட்படி, மூத்த பெண் குடிமக்களுக்கான கட்டண சலுகை 01.04.08 முதல் ஏற்கெனவே 30%லிருந்து 50 % ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.)

ரயில்வேயைப் பொறுத்த வகையில், மூத்த குடிமக்களுக்கான வயது உச்ச வரம்பு இரு பாலாருக்கும் இதுவரையிலும் 60 வயதாக இருந்தது. 2011- 12 பட்ஜெட்படி, இது பெண்களுக்கு 58 வயதாக குறைக்கப்பட்டிருக்கிறது.

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இதுவரையில் இருந்துவந்த 30% சலுகை 40 % ஆக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 

28.02.11ல் நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2011- 12ம் ஆண்டுக்காக பட்ஜெட்டில் தனி நபர்களுக்கு அளித்த சலுகைகள்:

இது வருமான வரி கணக்கீடு ஆண்டு (Assessment Year 2011 -12) க்குப் பொருந்தும்.

ரூ.5 லட்சம் வரை சம்பளமாக வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டாம் என்ற  நிலையிலுள்ள சம்பளமாக வருமானம் பெறுபவர்கள் அவர்களுக்கு பிற வருமானமாக டிவிடென்ட் மற்றும் வட்டி இருந்தால் அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் ஆதாரத்துடன் சொல்லி வருமானத்தில் சேர்க்க வேண்டும். மொத்த வருமானம் ரூ 5 லட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

தனி நபர் வருமான வரி விலக்கு ஆண்களுக்கு ரூ.1.6 லட்சத்திலிருந்து ரூ1.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு ஏற்கெனவே இருந்த ரூ.1.9 லட்சத்திலிருந்து மாற்றமில்லை.

மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65 லிருந்து 60 ஆக குறைத்து, வருமான வரம்பையும் ரூ 2.4 லட்சத்திலிருந்து ரூ 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

முதல்முறையாக, 80 வயதும், அதற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி சலுகை வரம்பு ரூ 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

பிரிவு 80 C யின்படி சேமிப்புக்கு ரூ.1,00,000 வரை வரி விலக்கு உண்டு.

ஆண்கள், பெண்களுக்கு முறையே ரூ.1,80,001, 1,90,001லிருந்து ரூ.5,00,000 வரை வருமான வரி 10% செலுத்தவேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு ரூ.2,50,001 லிருந்து ரூ.5,00,000 வரை வருமான வரி 10 % செலுத்தவேண்டும்.

அனைவர்க்கும் ரூ.5,00,001 லிருந்து ரூ.8,00,000 வரை வருமான வரி 20% செலுத்தவேண்டும்.

அனைவர்க்கும் ரூ.8,00,001 க்கு மேல் வருமான வரி 30% செலுத்தவேண்டும்.

வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு மொத்த வரியில் 10% (Surcharge) சர்சார்ஜ் செலுத்த வேண்டும்.

மொத்த வரி + சர்சார்ஜ்-ல் 3 % Education cess செலுத்த வேண்டும்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It