ஐஸ்கிரீம் கண்டுபிடிப்பாளர், (Matt O'Connor) 'மாட் ஓ'கோனர்' என்பவர் லண்டனில் 'கோவென்ட் கார்டன்' என்ற இடத்தில் ஐஸ்கிரீம் பார்லர் நடத்திவருகிறார். இவர் நேற்று வெள்ளிக்கிழமை (25.02.11) முதல் 'பேபி ககா' என்ற பெயரில் தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் செய்து வியாபாரம் செய்கிறார். தாய்ப்பாலுடன், (Madagascan Vanilla Pod) 'மடகாஸ்கன் வேனில்லா பாட்' என்ற பழமும், எலுமிச்சம்பழத்தின் (Lemon zest) ஒரு பகுதியும் (பழத்திற்கும், தோலுக்கும் நடுவில் உள்ள பகுதி?) சேர்த்து செய்யப்படுகிறது. ஐஸ்கிரீமின் விலை 14 பவுண்ட்கள்.

Mother's forum என்ற தளத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து, தாய்ப்பால் தர சுமார் 15 தாய்மார்கள் இசைந்திருக்கிறார்கள். லண்டனைச் சேர்ந்த விக்டோரியா HILEY, அவருடன் இணைந்து சில பெண்களும் தாய்ப்பால் தருகிறார்கள். என்னிடம் கூடுதலாக இருக்கும் பாலை பணத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு, நானே ஐஸ்கிரீம் சாப்பிட்டுப் பார்த்தேன், நன்றாக இருக்கிறது என்று HILEY சொல்கிறார். தாய்ப்பாலில் ஐஸ்கிரீம் சாப்பிடுபவர்கள், அதன் சுவையையும் அருமையையும் வெளியில் சொன்னால், இளம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தயங்கமாட்டர்கள் என்றும் HILEY சொல்கிறார்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

ஆதாரம்: REUTERS, பிப்ரவரி, 24, 2011

Pin It