தேவையான பொருட்கள்: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்து கல் நீக்கி சுத்தம் செய்து கிரைண்டரில் இட்டு நீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். அரைக்கும்போது பெருங்காயம் கரைத்த நீர், உப்பு சேர்த்து கெட்டியாக சற்று நறநறவென்று அரைத்து எடுக்க வேண்டும். மாவில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி, தட்டிய மிளகு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயும்போது, இலையில் நீர் தடவி, ஓர் உருண்டை மாவை வைத்து தட்டி நடுவில் விரலைக் கொண்டு துளை செய்து சூடாகிக் கொண்டிருக்கும் எண்ணெய்யில் போட்டுப் பொன்னிறத்தில் சுட்டெடுக்கவும்
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
பச்சைமிளகாய் - 5
இஞ்சி - ஒரு சிறுதுண்டு
மிளகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் சிறிது
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீற்றில் தேட...
மெதுவடை
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: காரம்