தேவையான பொருட்கள்:

முளைக்கீரை - ஒரு கட்டு
உளுத்தம் பருப்பு - 200 கிராம்
பெருங்காயம் - ஒரு துண்டு
மிளகாய்வற்றல் - 5
பச்சைமிளகாய் - 3

செய்முறை:

முளைக்கீரையை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து சுத்தம் செய்து அவற்றுடன் வற்றல் மிளகாய், பெருங்காயம் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நறநறப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும். மாவுடன் நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, மாவினை மெல்லியதாகத் தட்டி வாணலியில் காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்க வேண்டும்

Pin It