தேவையான பொருட்கள்:

கோழி நெஞ்சுக் கறி: 750 கிராம்
தேன்: 1 மேசைக்கரண்டி
சோயா சாஸ்: 1 மேசைக்கரண்டி
சாம்பார் வெங்காயம்: 150 கிராம்
குட மிளகாய்: 2
பூண்டு விழுது: 2 தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

கோழி நெஞ்சுக்கறியை சதுரத் துண்டுகளாக வெட்டி, கழுவி பிழிந்து வைக்கவும். அதனுடன் பூண்டு விழுது, சோயா சாஸ், தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்ந்து பிசைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

குட மிளகாயில் விதை நீக்கி சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை துளை செய்து வைக்கவும். கறித் துண்டுகளை வடிகட்டி எடுத்து, கறி வேக வைக்கும் பற்றுக் கரண்டியில் கறி, வெங்காயம், குடமிளகாய், கறி என மாற்றி மாற்றி வைத்து வேக வைக்கவும்.

Pin It