தேவையான பொருட்கள்:

கோழிக்கறி - 700 கிராம்
வெங்காயம் - 150 கிராம்
குடமிளகாய் - 1
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
தேன் - 1 மேசைக்கரண்டி
பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு 

செய்முறை:

கோழிக்கறியை சிறுதுண்டுகளாக வெட்டி தண்ணீரில் கழுவவும். பின்பு அதை தண்ணீரில்லாமல் பிழிந்து, அதனுடன் சோயா சாஸ், பூண்டு விழுது, தேன், சிறிது உப்பு சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். 

பின்பு குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக வெட்டவும். இதை கறியுடன் சேர்த்து செந்நிறத்தில் பொறித்து எடுக்கவும்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.