தேவையான பொருட்கள்:
கோழி இறைச்சி: 250 கிராம்
மைதா: 1 மேசைக்கரண்டி
பால்: 100 மில்லி
மஷ்ரூம்: 10
வெண்ணெய்: 2 தேக்கரண்டி
வெங்காயத் தாள்: 1 மேசைக்கரண்டி
சோளமாவு: 1 தேக்கரண்டி
காரட்: 1 மேசைக்கரண்டி
தக்காளி விழுது: 2 மேசைக்கரண்டி
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
கோழியை துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மஷ்ரூம், காரட், வெங்காயத்தாள் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக வெட்டி கோழி இறைச்சியுடன் சேர்க்க வேண்டும். தக்காளி விழுதை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்தவுடன் உப்பு சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து பாதியளவு பாலை அதில் ஊற்றி வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் இளகி கரைந்ததும் பால், மைதா மாவு, சோளமாவு சேர்த்து கிளற வேண்டும்.
வெண்ணெய் மாவு கலவை கூழ்போல் பக்குவம் வந்தபின், இறைச்சிக் கலவையை அதில் கொட்டி நன்கு கிளறி குறைந்த தீயில் சிறிது நேரம் மூடி வைக்கவும். சிறிது நேரம் கழித்து, பின்பு இறக்கிப் பரிமாறவும்.
கோழி பால் கறி
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.