தேவையான பொருட்கள்:

சுறா மீன் -‍ 500 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 1
கடுகு - தாளிக்க
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பூண்டு ‍ 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை ‍ சிறிதளவு

கரைத்து கொள்ள வேண்டியவை:
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
தனியா தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி

வறுத்து அரைக்க வேண்டியவை:
மிளகு - 10
சீரகம் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் மீனினை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி , பூண்டினை பொடிதாக வெட்டி வைக்க வேண்டும். புளியினை 4 கப் தண்ணீரில் கரைக்க வேண்டும். அதனுட‌ன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் உப்பு சேர்த்து கரைக்க வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் காயவைத்து அதில் கடுகு போட்டு தாளித்து பின் வெந்தயம் சேர்க்க வேண்டும். பின் அதில் பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளி மற்றும் கரைத்து வைத்துள்ள புளியினை ஊற்றி 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது மிளகு மற்றும் சீரகத்தினை வாணலியில் வறுத்து எடுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ள வேண்டும். இஞ்சியினை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகாயினை இரண்டாகக் கீறி கொள்ள வேண்டும். குழம்பு நன்றாக கொதி வந்தவுடன் மீன், அரைத்த பொடி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மீனை வேக விட வேண்டும். கொத்தமல்லி தூவி பரிமாற வேண்டும்.

Pin It