தேவையான பொருட்கள்:

1. வஜ்ஜிரம் மீன் - 750 கிராம்

2. மிளகாய் வற்றல் - 12 - 15

3. ஒரு முழு பூண்டு

4. கறிவேப்பிலை - கொஞ்சம்

5. உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

உப்பு, மிளகாய் வற்றல், பூண்டு, கறிவேப்பிலை அனைத்தையும் சிறிது தண்ணீர் விட்டு சற்று கெட்டியான விழுதாக அரைக்க வேண்டும். இதை மீன் துண்டுகள் மீது தடவி குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தவாவில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீன் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வேக விட வேண்டும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் திருப்பி போட வேண்டும். இரண்டு பக்கமும் நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாற வேண்டும்.

Pin It