தேவையான பொருட்கள்:

ஆட்டிறைச்சி - 250 கிராம்
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
கசகசா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டி விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் விழுது - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
வெங்காய விழுது - 1 மேசைக்கரண்டி
சோம்புத் தூள் - 1 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கொத்துமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு


செய்முறை:

ஆட்டு இறைச்சியை சுத்தம் செய்து கழுவி, குக்கரில் போடவும். அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், இஞ்சி பூண்டு, வெங்காய விழுது, தேங்காய் விழுது, சோம்பு, கசகசா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இவற்றுடன் 200 மில்லி தண்ணீரும் சிறிதளவு உப்பும் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். குழம்பு சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரம் மசாலா தூள், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் குக்கரில் தயாரித்த இறைச்சிக் குழம்பை தாளித்துக் கொட்டி கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

Pin It