தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 500 கிராம்
புளி - 50 கிராம்
நல்லெண்ணை - 100 மி.லி.
காய்ந்த மிளகாய் - 5
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 30 கிராம்
வெங்காயம் - 1 துண்டு
எள் - ஒரு தேக்கரண்டி
உளுந்துப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு 

செய்முறை:

அரிசியை ஊற வைக்கவும். பின்பு அதை சாதமாக வடித்து, ஆற வைக்கவும். கடலைப் பருப்பை ஊற வைக்கவும். வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்து பொடி செய்து கொள்ளவும். பெருங்காயத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். புளியைக் கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

எண்ணையைப் பாத்திரத்தில் ஊற்றி காய வைக்க வேண்டும். பின்பு அதில் கடுகைப் போட வேண்டும். கடுகு வெடித்ததும் ஊறவைத்த கடலைப் பருப்பை எடுத்துப் போடவும். கடலைப் பருப்பு சிவந்ததும் உளுந்துப் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலையை போடவும்.

மிளகாய் வதங்கிய பின்னர் கரைத்த புளியை ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும்., மஞ்சள் தூள், பொடி செய்த பெருங்காயம் ஆகியவற்றையும் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதை இறக்கி வைத்து, ஆறின சாதத்தில் கலந்து நன்கு கிளறவும். கிளறும்போது பொடி செய்த வெந்தயம், எள் இரண்டையும் கலக்க வேண்டும். 


Pin It