1970 க்கு முன்பு வரை அமெரிக்கா வெளியிட்ட டாலருக்கு நிகராக தங்கத்தை கையிருப்பில் வைத்திருந்தது. டாலரின் மதிப்பு ஒரளவு தங்கத்தினால் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் 1970களுக்கு பிறகு இந்த நிலை மாறத் தொடங்கியது. இதுபற்றி <"http://www.keetru.com/literature/essays/sathukkabootham.php"> டாலர் அரசியல் என்ற பதிவில் எழுதி இருந்தேன். 1970களுக்கு பின் அமெரிக்கா கணக்கின்றி டாலரை அச்சிடத் தொடங்கியது. அமெரிக்கா தான் வாங்கிய கடனுக்கு தங்கத்தை திருப்பித் தர வேண்டியிருந்ததால், தற்போதைய சூழ்நிலையில் எந்த அளவுக்கு திரும்பிக் கொடுக்க முடியும் என்று பார்ப்போம்.

dallarஅமெரிக்காவின் தற்போதைய கடன்: $10,598,468,155,070($10.5 டிரில்லியன்கள்)

அமெரிக்காவின் தங்க கையிருப்பு: 261,498,899.316 (261 மில்லியன்)அவுன்சுகள்.

1 அவுன்சு விலை $837 என்று வைத்து கொண்டால் அமெரிக்க கையிருப்பின் மொத்த மதிப்பு: 218,874,578,728($218 பில்லியன்).

இந்த தகவலை வைத்து பார்த்தால் 2% கடன்களுக்கு மட்டுமே தங்கத்தை திருப்பி கொடுக்க முடியும்.

அதாவது சுமார் 48.42 சதம் வீக்கமடைந்துள்ளது( inflated). இது கடன் தொகையை மட்டும் வைத்து கணக்கிடப்பட்டது. உள்நாட்டு பணப் புழக்கத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க அரசு gold convertability முறையை கைவிட்டு விட்டதால் அதற்கு தங்கத்தை கட்டாயம் சேமித்து வைக்கும் அவசியம் இல்லை. அது அவ்வாறு சேமித்து வைக்கத் தொடங்கியிருந்தால் தங்கம் விலையும் இப்போது போல் இருந்திருக்காது. (அமெரிக்காவாலும் இந்த அளவு கடன் வாங்கி இருக்க முடியாது). எனவே இது முழுமையான தகவலாக இருந்திருக்காது. ஆனாலும் இந்த செய்தி உண்மையான டாலரின் மதிப்பையும், தங்கத்தின் மதிப்பையும் கணிக்க உதவும்.

சமீபத்திய நிதி நெருக்கடியால் மேலும் சிறிதளவு தங்கத்தை விற்று விடவும், பெரிய அளவு பணத்தை அச்சிடப் போவதாகவும் செய்திகள் வெளிவரத் தொடங்கி உள்ளது. அவ்வாறு நடந்தால் நிலைமை மேலும் மோசமாகக்கூடும்.

- சதுக்கபூதம், (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It