surya anushka shruthi

சி- 3 (அல்லது) எஸ்ஐ 3 (அல்லது) சிங்கம் 3...

சிங்கம் 3ன்னு பேர் வச்சிட்டுப் போக வேண்டியதுதானே...! அதென்ன டைட்டில்லயே இவ்வளவு குழப்பம்னு யோசிச்சிக்கிட்டே தியேட்டர்க்குப் போனா படத்துல பெரிய அளவு எந்தக் குழப்பமும் இல்ல. ஓரளவு பாக்குற மாதிரிதான் இருக்கு. குறிப்பா இந்த வருடத்தோட முதல் ப்ளாக்பஸ்டரா ஆவதற்கான எல்லா வாய்ப்புகளும் தெளிவாத் தெரியுது. ஆனா ரொம்ப நாளைக்கு இப்படியே பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருக்கவும் முடியாது.

போலிஸ் அதிகாரி துரைசிங்கம், எந்த நேரமும் எக்ஸர்சைஸ் பண்ணிட்டு சுத்திக்கிட்டு இருக்குற ஆஸ்திரேலிய வில்லனை வலைவிரிச்சிப் புடிக்கிறதுதான் இந்த சி-3. வலையை வில்லனுக்கு மட்டும் போடல... ரசிகர்களுக்கும் போட்டு அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அசைய விடாம மூச்சு முட்டுற அளவுக்கு ஆக்சனையும், டீட்டெயிலிங்கையும் தெளிய வச்சி, தெளிய வச்சி அடிச்சிடுறாரு இயக்குனர்.

ஹரி படங்கள்ல சில விசயங்கள் தொடர்ந்து வந்துட்டே இருக்கு. உதாரணமா ஃப்ளைட் டைமிங்ஸ், ட்ரைன் டைமிங்ஸ், இரண்டு ஊர்களுக்கு இடையேயான கிலோமீட்டர் தூரக் கணக்குகள். பத்து மணிக்கு தூத்துக்குடிக்கு ஃப்ளைட் இருக்கு, அதைப்புடிச்சு பதினொரு மணிக்கு வந்துரு... இல்லன்னா நான் விஜயவாடாவுக்கு முப்பது கிலோமீட்டருக்கு முன்னாடி இறங்கி, அங்க இருக்க ரிங்ரோட்ல போய் வளைச்சி புடிச்சி, டோல்கேட்ல இருக்குற சிசிடிவியில போய்.. (ஏ இருங்கய்யா நெஞ்சு அடைக்குது) போன்ற வசனங்கள். அப்புறம் ஜிபிஎஸ் & செல்போன் டவர் சிக்னலையெல்லாம் வச்சிக்கிட்டு பம்மாத்து காட்டுறது. ஃபாஸ்ட் பார்வர்ட்ல ஓடுற கேமரா, எந்த இடத்துலயுமே கேப் விழுந்துறாம வசனங்கள் பேசிட்டே இருக்குறது,தேவையில்லாத மொக்கை டபுள் மீனிங் காமெடிகள் எல்லாமே அச்சு பிசிறாம அப்படியே இதுலயும் ஒட்ட வச்சிருக்காரு. என்ன ஒரு ஆறுதல்னா அதை ஒழுங்கா ஒட்டிட்டாரு.

surya singam3கேப்டன் விஜயகாந்த்தை மிஸ் செய்யுற ஃபீலிங் எனக்கு எப்பவுமே இருக்கும். அதை இந்தப் படம் போக்கிருச்சு. இந்தப் படத்துல நிஜமாவே உளவுத்துறை, வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களோட டச் இருக்கு. ஏன்னா போலிஸ் படங்கள்ல அத்தனை வெரைட்டியையும் விஜயகாந்த் ஏற்கனவே பண்ணிருக்காரு.

சூர்யாவோட தனி ராஜ்ஜியம்தான் இந்தப் படம். செம எனர்ஜியோட ஓங்கி அடிச்சிருக்காரு. செம ஸ்டைலாவும் இருக்காரு. அஞ்சான் படத்துக்கப்புறம் சூர்யாவைக் கலாய்க்குறது ஒரு ஃபேஷனாயிடுச்சி.சூர்யா நீண்ட நாளா காத்திருந்த வெற்றி இதுல கிடைச்சிரும். சின்ன ரோல்ல கூட ராதிகா ஸ்கோர் பண்றாங்க.

இந்தப் படத்தோட, சிலபேரு/சில விசயங்கள் வாலண்டியர் ரிட்டையர்மென்ட் வாங்குனா நல்லதுன்னு தோனுது. முதல்ல ஹரியோட ஃபாஸ்ட் புட் ஆட்டிடியூட். உதாரணமா ரசிகர்கள் வேகத்தை எதிர்பாக்குறாங்கன்னு தப்புக் கணக்கு போட்டுக்கிட்டு ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணிக்கிட்டு திரியிறாரு. அதை மாத்தனும். "ஸ்பீட் த்ரில்ஸ் பட் கில்ஸ்" மிஸ்டர் ஹரி. அடுத்து கேமரா சேட்டைகள். கமர்சியல் படம்தான். அதுக்காக வில்லனோட மூக்கு ஓட்டைலலாம் கேமராவைக் கொண்டு வச்சா என்ன அர்த்தம்? ஹெலிகேமை வச்சி அப்படியே பிரமிப்பூட்டுறாங்களாமாம். ஏங்க நல்லா இல்லைங்க.

அடுத்து அனுஷ்கா. சொல்றதுக்கே வருத்தமாதான் இருக்கு. பழைய பொலிவை இழந்துட்டாங்க. குண்டா தெரியிறாங்க. அப்புறம் சூரியோட காமெடி. படத்தோட மிகவும் தேவையேயில்லாத போர்ஷன்னு ஸ்ருதி ஹாசன் மற்றும் சூரி வர்ற எல்லாக் காட்சிகளையும் சொல்லிறலாம்.

கட்டாயமா ரிட்டையராக வேண்டிய இன்னொரு ஆள் ஹாரிஸ் ஜெயராஜ். அப்பட்டமா "தள்ளிப் போகாதே" பாட்டைத் திருடி எதோ பண்ணி வச்சிருக்கிறாரு. இருமுகன்ல வர்ற "ஹெலனா","கண்ணை விட்டு" பாடல்களையும், அந்நியன்ல வந்த 'கண்ணும் கண்ணும் நோக்கியா' போன்ற காப்பியடிச்சி போட்ட பாட்டையெல்லாம், மறுபடியும் காப்பியடிச்சிப் போட்டுருக்காரு. பாடல்கள்லாம் எப்படி இருக்குன்னா ஜெயலலிதாவோட ஃபோட்டோவை தீபா மூஞ்சியை வச்சி ஃபோட்டோஷாப் பண்ணுனா மாறி கேவலமா இருக்கு. (ஆஹா ரொம்ப லென்த்தா போய்ருச்சே).

ஆக மொத்ததுல ரொம்ப நாள் கழிச்சி ஒரு பக்கா விஜயகாந்த் படம் பார்த்த உணர்வை இந்த சி3 குடுத்துச்சி. அதே சமயத்துல மூச்சு முட்டச் செய்யுற அளவுக்கு கமர்சியல் அம்சங்களும் இருக்கு. சிங்கம் 1 தான் இப்பவும் பெஸ்ட். சிங்கம் 2ல என்ன இருந்ததோ அதேதான் இதுலயும் இருக்கு. (சிங்கம் 1 > சிங்கம் 2 = சிங்கம் 3)

சிங்கம் 3 காது சவ்வுகளைப் பதம் பார்க்கும் ஒரு ஓவர்லோடட் என்ட்ர்டெய்ன்மென்ட்னு சொல்லலாம்.

- சாண்டில்யன் ராஜூ

Pin It