ஒரு நிறுவன மேலாளர் தனது நிறுவனப் பொருட்கள் குறித்து முக்கியமான கூட்டமொன்றில் பேச வேண்டியிருந்தது. அங்கு எல்லோரையும் கவரும் விதத்தில் பேசுவதற்கு, 20 நிமிட நேரப் பேச்சு ஒன்றைத் தயாரிக்குமாறு தனது உதவியாளரிடம் கூறினார். அவரும் உரை ஒன்றைத் தயாரித்தார்.
ஆனால், கூட்டம் நீண்ட நேரம் நடந்தது. கோபத்துடன் வெளியே வந்த மேலாளர் கேட்டார்.
“நான் 20 நிமிடப் பேச்சைத்தானே தயாரிக்கச் சொன்னேன். ஆனால் நீ ஒரு மணி நேரத்துக்கும் அதிகமான பேச்சைத் தயாரித்திருக்கிறாய். நான் முடிக்கும் முன்பே பலர் வெளியேறிப் போய்விட்டார்கள்.”
“நான் 20 நிமிடத்திற்குத்தான் தயாரித்தேன். ஆனால் நமது அலுவலக வழக்கப்படி, இரண்டு நகல்களும் சேர்த்துக் கொடுத்தேன்.”
கீற்றில் தேட...
பொது
20 நிமிடப் பேச்சு
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: பொது