கீற்றில் தேட...

‘1000 ரூபாய்க்கு பழைய கார்’ என்று பத்திரிகையில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. விளம்பரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒருவர் கார் உரிமையாளரைப் பார்க்கச் சென்றார். விளம்பரம் கொடுத்திருந்தது ஒரு பெண்மணி.

காரைப் பார்த்தார். புத்தம் புதிது போலிருந்தது. அசல் விலை 10 லட்சம் இருக்கும் என்று தோன்றியது. இவ்வளவு விலையுயர்ந்த காரை எதற்கு வெறும் 1000 ரூபாய்க்கு விற்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பெண்மணி சொன்னார்:

“இது என் கணவருக்குச் சொந்தமான கார். போன வாரம் தனது செகரட்டரியுடன் ஓடிப் போய்விட்டார். நேற்று எனக்கு அவரிடமிருந்து ஒரு ஈமெயில் வந்தது. எனக்கு பணம் தேவைப்படுகிறது. எனது காரை விற்று, அதில் வரும் பணத்தை அனுப்பி வைக்கவும் என்று கூறியிருந்தார். அதனால்தான் விற்கிறேன்”