முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் அமைச்சர் இல்லாமலேயே தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்தவர். ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், கருணாநிதியின் துரோகங்கள் தந்த வலியால், இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் பான்மை முஸ்லிம் சமுதாயம் ஜெயலலிதா கட்சிக்கு வாக்க ளித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உறுதுணை யாக நின்றது. அரசியலில் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையிலிருந்த ஜெயலலிதா, மீண்டும் அரியாச னம் ஏறியவுடன் முஸ்லிம் சமுதா யத்தின் மீதான தனது மனநி லையை வெளிப்படுத்தினார். அவ ரது அமைச்சரவையில் கவுண்டர் சமுதாயத்திற்கு 8, தேவர் சமுதா யத்திற்கு 6, வன்னியர் சமுதாயத் திற்கு 5 என அமைச்சர் பதவி களை வழங்கியவர்.

தமிழகத்தில் சுமார் 13 சதவிகி தம் உள்ள முஸ்லிம் சமுதாயத் திற்கு ஒரே ஒரு அமைச்சர் பத வியை வழங்கினார். அதுவும் நிதி, போக்குவரத்து, சட்டம், மின்சாரம், பொதுப்பணி போன்ற பிரபல்ய மான துறைகளை விட்டு முஸ்லிம்களுக்கு 'சுற்றுச் சூழல்' என சுற்றலில் விட்டார். ஜெயலிதாவின் இந்த செயல், அவரது கடந்த கால அரசியல் தோல்வி அவருக்கு மன மாற் றத்தை தந்திருக்கும் என நம்பி வாக்களித்த முஸ்லிம்களுக்கு நெஞ்சில் நெருஞ்சியாய் குத்தி யது. இருந்தாலும் ஆலை இல்லாத ஊருல இலுப்பைப் பூ சக்கரை' என்ற பழமொழிகேற்ப, ஏதோ ஒன்றாவது தந்தாரே என ஆசுவா சப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அல்லாஹ் அந்த அமைச்சரையும் அற்ப நாளில் இறப்பெய்யச் செய்து விட்டான். மரியம்பிச்சை மரணமடைந்த செய்தியறிந்து முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு அனுதாபம் தெரிவித்த வேளை யில், மரியம்பிச்சைக்கு கண்ணீர் அஞ் சலி செலுத்தினார் ஜெயல லிதா. இது சற்றே ஆறுதலாக தெரிந்தது. மரியம்பிச்சை முஸ்லிம் சமுதா யத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது துறை ஒரு முஸ்லிமுக்கே வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த வேளையில் அந்த நம் பிக்கையை தகர்த்தெறிந்து இருக் கிறார் ஜெயலலிதா.

கவர்னர் பர்னாலா பிறப்பித்த உத்தரவில் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் துறைகள் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கடந்த வாரம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின் பேரில், மறைந்த அமைச்சர் என். மரியம் பிச்சையி டம் இருந்த சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் ஆகிய துறைகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், இனிமேல் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்று அழைக் கப்படுவார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரதிநித்துவம் இல்லாத ஆட்சி நடத்த ஜெயலலிதா நாடி விட்டார் என தெரிகிறது. மேலும் இவரது கட்சியில் முஹம்மது ஜான் மற்றும் அப்துர் ரஹீம் ஆகிய முஸ்லிம் எம்.எல். ஏக்கள் இருக்கும் நிலையில் அவர் களுக்கு இந்த வாய்ப்பை வழங்காமல் புறந்தள்ளியிருக்கிறார். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவிற்கு நீண்ட காலமாக விசுவாசமாக இருக்கும் அன்வர் ராஜாவுக்கு இந்த பதவியை வழங்கியிருக்கலாம். அவரை மரியம்பிச்சை தொகுதி இடைத் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற செய்திருக்கலாம். அதையும் ஜெயலலிதா தவிர்த்துள்ளார். ஆக ஜெயலலிதாவின் போக்கு மாறாதோ என எண்ணத் தோன்றுகிறது.

கருணாநிதியின் பக்கம் முஸ்லிம்களின் ஆதரவு இனி ஒருபோதும் திரும்பாது இன்ஷா அல் லாஹ். அதேபோல ஜெயலலிதா முஸ்லிம்கள் விசயத்தில் தனது போக்கை மாற்றிக் கொள்ளா விட்டால் வரும் தேர்தல்களில் முஸ்லிம்களின் வெற்றிச் சின்னம் 49ஓ'வாக மாறிவிடும் என்பதை அதிமுக கவனத்தில் கொள்வது நல்லது!

- முகவை அப்பாஸ்

மரியம்பிச்சை ராசியில்லாதவரா? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தினமலர்!

மனிதனின் மரணம் என்பது அனைவரா லும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. மரணம் என்பது யாருக்கு எப்போது எந்த வடிவில் வரும் என்பதை எவரும் அறிய முடியாது. இறைவனின் இந்த நியதியின்படி மரியம் பிச்சை, அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத் தில் சட்டசபையில் எம். எல்.ஏ.,வாக உறுதிமொழி ஏற்க இருந்த நிலையில், விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இதையொட்டி ராசியில்லாத அமைச்சர்கள்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது தின மலர். அமைச்சராக பதவியேற்ற அற்ப நாளிலேயே ஆயுள் முடிந்த மரியம் பிச்சையை ராசியில்லாதவர் என்று தினமலர் எழுதுவது, அவரது மரணத்தையே இழிவுபடுத்துவதாகும். அவரது மரணத்தால் துடித்துக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினரின் உணர்வுகளை புண்படுத்துவதாகும்.

மேலும் ஒரு மனிதன் பதவியில் வீற்றிருக்கும் நாளின் எண்ணிக்கைதான் அவன் ராசியானவன் என்பதற்கும், ராசியில்லாதவன் என்பதற்கும் அளவுகோலாக கொள்கிறதா தினமலர்? வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி; மக்களின் மனதில் நிற்பவர் யார்?' என்ற பாடல் வரி போன்று, திருச்சி மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு மட்டும் அறிமுகமான மரியம் பிச்சை இன்று உலகம் முழு வதும் வாழும் தமிழர்களின் மனதை நெகிழச்செய்து விட்டு மறைந்தது தினமலரின் மூடநம் பிக்கை கண்களுக்கு தெரியவில் லையா? எங்கே மரியம் பிச்சையை மட் டும் எழுதினால் அதிமுகவினர் கொந்தளித்து விடுவார்களோ என்ற பயத்தில் காலம் சென்ற அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் ராஜனையும், முந்தைய அதிமுக ஆட்சியில், 2001ல் அமைச்சராக பதவியேற்ற ஒரு வாரத்தில் பதவியிழந்த அய்யாறு வாண்டையாரை யும் சேர்த்து ராசியில்லாத வர்க ளாக காட்டி இழிவுபடுத்துகிறது தினமலர். ராசிபலன் மீது தினமலருக்கு நம் பிக்கை இருக்கலாம் தவறில்லை. அந்த ராசியை இறந்தவர்கள் மீதும் இருப்பவர்கள் மீதும் திணித்து இழிவுபடுத்தும் வேலையை செய் வது பத்திரிக்கை தர்மமல்ல என் பதை தினமலர் புரிந்து கொள்ளட்டும்.

- சூரிய குமாரன்

Pin It