குற்றங்கள் நிகழும் இடங்களில் ஆண்களின் ஆரோக்கியம் காக்க உதவும் “இதயத்திற்காக மரங்கள்” (Parks for Heart) என்ற திட்டம் அமெரிக்கா ஃபிலடெல்ஃபியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இயற்கையின் மாயாஜாலம் என்று கருதப்படுகிறது. குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களில் இது தூய காற்றுக்கு மட்டும் இல்லாமல் இதய நலம் காக்கவும் உதவுகிறது என்று புதிய ஆய்வு கூறுகிறது.pathway in parkஇதனால் குறிப்பாக ஆண்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அடர்த்தியான மரம் செடி கொடிகள் இருக்கும் இடங்கள் இரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயத்தை நோய்களிடம் இருந்து பாதுகாக்கிறது. பசுமையிடங்கள் ஒருவரின் ஒட்டுமொத்த உடற்தகுதி, மன நலம் மற்றும் சமூக நலத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

2025ம் ஆண்டிற்குள் நகரின் எல்லா இடங்களிலும் இருக்கும் பசுமைப் பரப்பை 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என்ற நோக்கத்துடன் 2009ல் ஃபிலடெல்ஃபியா பசுமைப் பணிகள் (Greenworks Philadelphia) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இழந்த பசுமையை மீட்க ஆயிரம் கால்பந்தாட்ட மைதானங்கள் அளவு நிலப்பரப்பில் மீண்டும் பசுமையை உருவாக்கும் குறிக்கோளுடன் நகர அமைப்பு இப்போது பணிபுரிகிறது.

பசுமையிடங்களுக்கும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற பல உடல் நல பாதிப்புகளை குறைக்க உதவும் இயற்கைத் தீர்வுகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதை சமீப ஆய்வுகள் நிரூபித்து வருகின்றன. இதயக் கோளாறு தொடர்பாக ஏற்படும் மரணங்களைத் தடுக்க குறிப்பாக ஆண்களிடம் பசுமையிடங்கள் முக்கிய பங்கு வகிப்பதை அண்மையில் டிரக்ஸெல் (Drexel) பல்கலைக்கழக டோன்சைஃப் (Dornsife) பள்ளி விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டது.

இது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஆரோக்கியம் மற்றும் இடங்கள் ஒன் செக் (Health and Place (1✔) ) என்ற இதழில் வெளிவந்துள்ளது.

மேம்பட்ட மன நலம் பெற பசுமை இடங்கள் அதிகம் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். பணிபுரியும் இடங்களுக்கு பசுமையிடங்கள் வழியாக செல்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது.

2008 முதல் 2015 வரை உள்ள காலத்தில் பூங்காக்கள், மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இதயக் கோளாறுகளால் ஏற்படும் மரணங்கள் குறைந்துள்ளது என்று பசுமையிடம் மற்றும் இதய நோய்கள் என்ற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.

“இதய நலம் மேம்படுவதன் மூலம் குற்றச்செயல்கள் குறைய வாய்ப்புள்ளது. சிக்கலான சமூக நலத்தின் பல்வேறு கூறுகளுக்கும் செயற்கை பசுமையிடங்கள், தனிநபர்களின் ஆளுமை அடையாளங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் புரிந்து கொண்டால் பசுமையிடங்கள் அதிகமுள்ள சமூகப் பகுதிகளால் அனைவரும் நலம் பெறலாம்” என்று டோன்ஸைஃப் பள்ளியின் முனைவர் பட்டதாரியும் ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியருமான லீஸ்கை நாசி (Leah Schinasi) கூறுகிறார். அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகளுக்கு இதயக் கோளாறுகளே முக்கியக் காரணம்.

இதய நோய்களால் மட்டும் அங்கு ஆண்டுக்கு 702,880 பேர் உயிரிழக்கின்றனர் என்று சி டி சி (CDC) ஆய்வு அமைப்பு கூறுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் வறுமை, இனப்பாகுபாடு, மக்கட்தொகை அடர்த்தி பற்றிய தரவுகளை ஆய்வாளர்கள் அமெரிக்க சமூக ஆய்வுகள் கணக்கெடுப்பிற்கான ஆணையத்திடம் இருந்து பெற்றனர்.

2009ல் ஃபிலடெல்ஃபியா மேயராக இருந்த மைக்கேல் நட்டர் (Michael Nutter) பசுமைப் பணிகள் ஃபிலடெல்ஃபியா (Greenworks Philadelphia) என்ற திட்டத்தை 2025ம் ஆண்டிற்குள் நகரின் ஒவ்வொரு பகுதியிலும் 30% பசுமையிடங்களை உருவாக்கும் நோக்கத்துடன் அறிவித்தார். 2008ல் நகரில் 20% பசுமைப் பகுதிகள் இருந்தன. பசுமையிடங்களுக்கு அருகில் இருந்தால் மன மகிழ்வு, செய்யும் வேலையில் உற்சாகம் மற்றும் வாழ்க்கையில் மன நிறைவு அதிகரிக்கிறது.

பசுமைப் பகுதியில் தனிநபர்கள் நேர்மறை உணர்வுகளை அதிக அளவில் பெறுகின்றனர். பூங்காக்கள் இதயநோய்களுக்கு எதிரான வாழ்வின் வழிமுறையாக செயல்படுகின்றன. பசுமையிடங்களால் ஏற்படும் ஏராளமான நன்மைகளை இந்த ஆய்வு மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறது” என்று டோன் ஸைஃப் பள்ளி பொது உடல் நலப் பிரிவு முனைவர் பட்டதாரி மாணவரும் ஆய்வில் முக்கியப் பங்காளியுமான வான்யூ வாங் (Wanyu Huang) கூறுகிறார்.

பூங்காக்கள், நதிகள், ஏரிகளுக்கு அருகில் வசிப்பதால் அதி தீவிர மன அழுத்தம் குறைகிறது. இதனால் அறிவாற்றல் குறைபாடு, டிமென்சியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. இலைகள் உயிர் காக்க உதவும் அற்புதங்கள். மரங்கள், பசுமை ஆகியவை அழுத்தக் குறைவு, கோடையில் குளிர்ந்த காற்றை வெளியிடுகிறது. அமைதியான சூழலை உருவாக்குகிறது.

ஒலி மாசைக் குறைக்கிறது. இது பற்றிய சமூகங்களின் பாதுகாப்புக்கு பசுமையிடங்கள் எவ்வாறு உதவுகின்றன என்று ஆழமாக ஆராயப்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூங்காக்களுக்கு பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் செல்கின்றனர். பூங்காவிற்கு செல்லும் ஒவ்வொரு சமயத்திலும் அங்கு அதிக நேரத்தை செலவிடுகின்றனர்.

இதனால் மரம் செடி கொடிகள் உள்ள இடங்கள் பெண்களை விட ஆண்களுக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுக் குழு கூறுகிறது. பசுமை அதிகம் உள்ள இடங்களில் பெண்கள் செல்வதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிக அளவில் செய்யப்பட வேண்டும். இயற்கை தரும் நன்மைகள் அனைவருக்கும் சுலபமாக கிடைக்க வேண்டும். அப்போது மனிதன் சந்திக்கும் இன்றைய பிரச்சனைகளுக்கு நேர்மறையான நிரந்தர நல்ல தீர்வு ஏற்படும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: http://wwஇதயத்திற்காக மரங்கள்w.medindia.net/news/parks-for-hearts-a-lifesaving-remedy-for-men-in-high-crime-areas-218365-1.htm

சிதம்பரம் இரவிச்சந்திரன்