கே: தமிழில் தகவல் தொழில்நுட்பத் துறையைப் பற்றிய நூல்கள் எப்படி உள்ளன?

தகவல் தொழில்நுட்பத்துறை நூல்களின் தேவை மிக அதிகமாக இருக்கு. ஓர் இளைஞனுக்கு அவன் எந்தத் துறையில் அதிக பங்களிப்பு அளிக்கணும், அல்லது நல்ல வருவாயை ஈட்ட முடிகின்றதுறை எது என்றால் உடனே மனதிற்கு எட்டக்கூடியது கணினி துறைதான். இந்தத் துறைதான் பாமரனை குபேரனாக்கியது, ஒரு நடுத்தரக்குடும்பத்தை செல்வந்தக் குடும்பமாக மாற்றியது. தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சரிவு என்பதெல்லாம் ஒரு காலத்தின் சூழல்தான். காலப்போக்கில் சரியாகி விடும். இதை வைத்துதான் வளர்ச்சி. இதை வைத்துதான் வளர்ச்சி என்றாலும் இதை நெருங்கும்போது ஆங்கிலம் தேவையாக தான் இருக்கிறது. எனவே இது வெள்ளைக்காரனோடது என்று தவறான முடிவுக்கு வரக்கூடாது. எந்த ஒரு மொழியையும் நாம் பாடமாக கற்க முடியும். கணினி என்பது ஒரு மின்னணுவியல் இயந்திரம். இது சம்பந்தமான மென்பொருட்கள், கையாளும் முறைகள், இயக்குவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை எளிய மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதமாக பல பதிப்பகங்கள் பல நூல்களை வெளியிட்டுள்ளன. கணினி சம்பந்தமாக பிரத்தியோகமாக இரண்டு பத்திரிகைகள் வெளிவருகின்றன. அன்றாட நாளிதழ்கள் கூட வாரத்திற்கு ஒருமுறை சிறப்புப் பக்கங்களை வெளியிடுகின்றன. கணினிதுறை அளவுக்கு வேறு எந்தத் துறை வளர்ந்திருக்கிறது? மற்ற துறைகளை விட கணினிதுறையின் ஆதிக்கம் அதிகமாயிடுச்சு என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சில பதிப்பாளர்கள் மென்பொருள் பதிவுஎண்கள் அடிப்படையில் நூல்களைப் பதிப்பிக்கிறார்கள். உதாரணத்திற்கு பேஜ்மேக்கர் 6.0, பேஜ்மேக்கர் 6.5 போன்ற புத்தகங்கள் வருகின்றன. இது தவறான முறை. பொதுவான முறையில் புத்தகங்கள் வருவதுதான் நல்லது. ஏனெனில் துறைசார்ந்த வளர்ச்சிதான் நமக்குத் தேவை. அதுதான் காலத்திற்கும் நிற்கும். நூல் என்பது அலமாரியில் காலம் முழுவதும் இருக்க வேண்டியது. ஒரு பரிணாம வளர்ச்சி என்பது துறை சார்ந்து இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும்.

நான் கணிப்பொறி துறைக்காக கிட்டத்தட்ட 118 நூல்களை எழுதியுள்ளேன். சிறு நூல்களாக 12 நூல்கள் எழுதியுள்ளேன். நான் எழுதிய ஐந்து நூல்கள் பல்கலைக் கழகப் பாடப்புத்தகமாக உள்ளது. ஒரு புத்தகம் தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளது.

கே: உங்களுடைய புத்தகங்களுக்கு வாசகர் வரவேற்பு எப்படி இருந்தது?

படைப்பாளி தனது படைப்பை பல்வேறு கோணங்களில் படைப்பதற்கு வாய்ப்பு உண்டு. கணிப்பொறி புத்தகங்கள் என்பது ஒரு துறை சார்ந்த படைப்பு. கணிப்பொறியில் பல பிரிவுகள் உள்ளன. அதில் என்னுடைய பிரிவில் நான் புத்தகங்களை படைக்கிறேன். வாசகர்களும் விரும்பி வரவேற்கிறார்கள். ஒவ்வொரு பிரிவிலும் இது மாதிரி பிரத்தியோகமாக படைத்தால்தான் வாசகர் வட்டம் விரிவடையுமனசைக் கீறி முளைத்தாய், மு. முருகேஷ் வெளியீடு: வெளிச்சம், கோவை 4. பக். 64 ரூ. 20

கே: கணினியை கையாள்வதில் சிக்கல் இருப்பதாக கூறுகிறார்களே?

ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற எந்தப் பொருட்களுக்கு ஜீஷீஷ்மீக்ஷீ, sஷ்வீtநீலீ, ஷீஸீ என்று அந்தப் பட்டன்கள் இருக்கும் பட்டன்களை அழுத்துகிறோம். அது போன்றுதான் விசைப்பலகையும். அதில் இருக்கும் குறியீடுகளை அழுத்துகிறோம். அதில் ஆங்கில குறியீடுகள் இருக்கின்றன. அதன் மீது தமிழ் எழுத்துக்களை நினைத்து அழுத்துகிறோம். குயிலுக்கு முட்டை இடத்தான் தெரியும். அடைகாக்க தெரியாது. அப்போது குயில் காக்கா கூட்டில் முட்டை போடுகிறது. காக்கா குஞ்சை பொறித்து வெளியில் போட்டு விடுகிறது. அது போலத்தான் நம்முடைய நிலைமையும். ஆங்கில விசைப் பலகையில் தமிழில் டைப் செய்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் என்பது ஆங்கிலத்திற்கு சொந்தமா என்றால் இல்லை. எலக்ட்ரானிக்ஸ் என்பது குறியீடு 01 என்று சொல்வாங்க. ஒவ்வொரு எழுத்துக்கு ஒரு குறியீடு இருக்கு. இந்த அடிப்படையில்தான் எல்லா மொழிக்கான எழுத்துக்களின் குறியீடுகள் அமைந்திருக்கும். உதாரணமாக ஒரு கி-யை அழுத்தும்போது ஒரு தமிழ் எழுத்தை அழுத்துவதாக நினைத்துக் கொள்ளவேண்டும். அதற்கான குறியீடு தான் உள்ளே பதிவாகிறது. அந்தக் குறியீட்டு அடிப்படையில்தான் தமிழ் எழுத்து உருக்கள் வரும். கணிப்பொறியில் உள்ள மென்பொருட்களை தேவையானவற்றை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். கணிப்பொறியில் பதிவாவது குறியீடு. இது கணிப்பொறியின் உள்ளே பணியாற்றுகிறது. பதிவானதை வெவ்வேறு வடிவங்களில் மாற்றுவது எழுத்துரு. இதைத்தான் நாம் கண்ணால் பார்ப்பது. இந்த இரண்டு அடிப்படையை புரிந்து கொண்டாலே சிக்கல் இருக்காது.

கே: தமிழில் என்ன என்ன விசை முறைகள் உள்ளன?

தமிழில் அச்சு செய்ய வேண்டும் என்றால் பத்து விரல்களையும் பயன்படுத்தினால்தான் வேகம் கூடும். மாணவர்கள் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே தட்டச்சு பயிற்சிக்கு போகச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். பருவத்தே பயிர் செய் என்பது போல சரியான பருவத்தில் நாம் கற்றுக் கொண்டால் விசைப்பலகை முறையை பயன்படுத்துவது சுலபமாக இருக்கும். பொதுவாக அதிகம் பயன்படுத்தப்படுவதும், சான்றிதழ் அடிப்படையிலும் சொல்லிக் கொடுக்கப்படும் முறை தமிழ் தட்டச்சு முறை. இந்த முறைதான் தமிழ் தட்டச்சு பயிற்சி மையங்களில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இரண்டாவது டிரான்ஸ் லிட்டேரசன் முறை. டிரான்ஸ் லிட்டேரசன் முறை என்பது உதாரணமாக அம்மா என்பதை ணீனீனீணீ என்று ஆங்கிலத்தில் அடித்தால் தமிழில் எழுத்துக்களில் அம்மா என்று வந்துவிடும். மூன்றாவதாக போனடிக் முறை. இந்த முறை ஒலியியல் அடிப்படையானது. கண்ணம்மா என்ற பெயரை அடிப்பதற்கு ஓர் அடிப்படை விதி ஒன்று இருக்கும். அதைப் பயன்படுத்தும்போது தமிழ், மலையாளம், ஹிந்தி என்று ஏதாவது ஒரு மொழியில் வரும். இந்திய மொழிகளுக்கு அடிப்படையான ஒலியியல் முறையில் பதிவாகிறது போனடிக் முறை. அடுத்து புதியதாக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ் 99 என்ற விசைப்பலகை முறை. தமிழ்99\ன் சிறப்பு என்பது விசைப்பலகை இடது பகுதியில் உயிர் எழுத்தும் வலது பகுதியில் மெய் எழுத்தும் இருக்கும். இதை ஏன் இப்படி வடிவமைத்து இருக்கிறார்கள் என்றால் உயிரும், மெய்யும் கலந்தது உயிர்மெய் எழுத்து என்பதால்தான். இது வயது தவறியவர்களுக்கும், புதியதாக கற்றுக் கொள்பவர்களுக்கும் தமிழ்99 உதவியாக இருக்கும்.

கே: தமிழ்99 முறை அரசால் அங்கீகரிக்கப்பட்ட முறை. அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். பொதுவாக எல்லோரும் இந்த முறையை பயன்படுத்தவில்லையே?

இதில் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஏனெனில் சிலபேர் சின்ன வயதிலேயே தட்டச்சு முறையை படித்தவர்களாக இருப்பார்கள். கம்யூட்டராக இருந்தாலும் மனிதர்கள்தான் வேலை செய்ய வேண்டும். மனிதர்களுக்கு எது எளிதானதோ அதைதான் பொதுவாக பயன்படுத்த நினைப்பாங்க. கணிப்பொறியை எதற்காக நாம் பயன்படுத்துகிறோம்? நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று தொடர்புகளை எளிமைப்படுத்துவது, அதனால் எது எளிமையோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் தட்டச்சு பயிற்சி முறைகள்தான் சான்றிதழ் அடிப்படையில் அங்கீகாரமாக இருக்கு. தமிழ்99க்கு அரசாணை இருக்கு. விரும்பி, எளிமையாக யாரும் படிக்க தமிழ்99 சரியாக இருக்கும்.

கே: எந்த மொழியில் கணினியை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்?

உலக அளவில் மக்கள் தொகை அதிகமான நாடு சீனாதான். இதன் அடிப்படையில் பார்க்கும் போது சீனாதான் அதிகமாக பயன்படுத்தி இருக்கணும். ஆசியாவில் கணினியில் தமிழின் பயன்பாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து. தமிழுக்கான தகவல் பரிமாற்றம், மற்றும் இது சம்பந்தமான தகவல் தொகுப்புகள், தமிழில் படைக்க வேண்டும் என்ற ஆர்வம், உலக அளவில் பிரிந்து இருப்பவனும், அறிஞனும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவனும் தமிழில் படைக்க முடியும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை வெளி உலகத்திற்கு பறைசாற்றுகிறது. இணையத்தின் மூலம் வெளிவந்த பல படைப்புகளை இதன் மூலமே உணரமுடியும்.

கே: கணினியில் தமிழ் எழுத்துக்களை வடிவமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக கூறுகிறார்களே?

தமிழ் எழுத்துக்களை வடிவமைப்பதில் சிக்கல் என்பது விசைப்பலகை (ளீமீஹ் தீஷீணீக்ஷீபீ) ஒவ்வொரு விதமாக இருக்கிறது. 102 ளீமீஹ், 72 ளீமீஹ், 115 ளீமீஹ் என்று இருக்கிறது. ஒவ்வொருத்தரின் தேவையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ஒருத்தர் பௌர்ணமிக்கு நிலா வேண்டும் என்கிறார். சிலர் வேதாந்த சின்னங்கள் வேண்டும் என்கிறார். இவையெல்லாம் தமிழ் எழுத்துக்கள் கிடையாது. மேலும் ஆய்வு பணிகள் நடைபெற வேண்டும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னாலே இதற்கான ஓர் ஆய்வை நடத்தி சில முயற்சிகள் எடுக்கப்போறோம்னு கேட்டபோது அதற்கான பங்களிப்பை நாம் கொடுக்க தவறிவிட்டோம். அதை இப்போது வேண்டுமென்றால் தொழில்நுட்பம் நிறைய மாறி இருக்கிறது. சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்காது. வருங்காலத்தில் கிடைப்பதற்கான முயற்சிகள் இருக்கு. பதினைந்து வருடத்தில் தவற விட்டதை பார்க்கும்போது அதை திரும்பித் தா என்றால் முடியாது. ஏனெனில் அதற்கான காலமும், தொழில்நுட்பமும் இப்போது நிறைய மாறி இருக்கிறது. மொழியை கணினி வாயிலாக பயன்படுத்தினால்தான் நமக்கு வியாபாரம் கிடைக்கும் என்று அமெரிக்க நிறுவனங்களும் சிந்திக்க தொடங்கியுள்ளன. இந்திய அரசும் தொழில்நுட்பத்தை பாமர மக்களிடம் கொண்டு சென்றால்தான் பல சீர்திருத்தங்களை செய்ய முடியும் என்ற சிந்தனைக்கு உட்பட்டுள்ளார்கள். இவையெல்லாம் சேர்ந்து காலபோக்கில் சரியாகிவிடும்.

கே: கணினியில் பணிபுரிபவர்களுக்கு நிர்ப்பந்தம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?

தமிழ்பதிப்பு பணி, டி.டி.பி. பணி ஆகியவைகளால்தான் குக்கிராமத்திற்கும், கணினியும் அது சார்ந்த தொழில்நுட்பமும் பரவியது என்று ஆணித்தரமாக சொல்லலாம். அருப்புக்கோட்டையிலும், காளையார் மங்கலத்திலும் வெள்ளைக்காரன் கணினியை நிறுவவில்லை. உள்ளூர்காரர்கள்தான் அவர்களின் சொந்த பணிக்காகவும், பதிப்பு பணிக்காகவும் தொடங்கினார்கள்.

ஓம், பிள்ளையார் சுழி போன்ற எழுத்துக்கள் தமிழ் எழுத்தில் வருவதில்லை. வடமொழி எழுத்துக்களும் தமிழ் கலந்து இருக்கின்றன. மதுரை ஜங்சன் போன்ற வார்த்தைக¬ப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும்.

தனி தமிழ் வார்த்தையில் கணினி, உயிர்வேதியல், மருத்துவம் போன்ற நூல்களைப் பார்க்க முடியாது. தனிதமிழ் வார்த்தைகள் உருவான பிறகுதான் இந்தத் துறைகளில் நூல்கள் வரமுடியும். தமிழில் 313 எழுத்துக்கள் இருக்கின்றன. விசைப்பலகையில் 101 எழுத்துக்கள் இருக்கின்றன. அப்போது ஒரு பட்டனில் மூன்று எழுத்துக்கள் இருக்கு. பொதுவாக சிலர் தனித்தமிழ் மொழியில் உள்ள 216 எழுத்துக்களை மட்டும் பயன்படுத்துவார்கள்; ஆனால் அனைத்தையும் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் கணினியாளருக்கு இருக்கிறது.

கே: சமீபத்தில் கணினியில் என்ன விஷயங்கள் வந்துருக்கு?

தற்போது கணினியில் ஷ்ஷீக்ஷீபீ ஜீக்ஷீஷீநீமீssஷீக்ஷீ வந்து இருக்கு. அதை தமிழில் சொற் செயலிகள் என்று சொல்கிறோம். இதில் இலக்கண திருத்தி, பிழை திருத்தி, சொல் திருத்தி, வாக்கிய திருத்தி ஆகியவற்றை செய்து கொள்ளலாம். ஜிணீனீவீறீ ஷீஜீtவீநீணீறீ நீலீணீக்ஷீணீநீtமீக்ஷீ க்ஷீமீநீஷீரீஸீவீsமீக்ஷீ யை ளிசிஸி என்று அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு 400 பக்கம் உள்ள ஒரு பழைய புத்தகத்தை மறுபதிப்பு செய்ய இந்த முறையில் தட்டச்சு செய்ய வேண்டாம். இதை ஸ்கேன் செய்தால் அது தானாகவே பிரதியாக மாறிவிடும். அதில் வேண்டிய இடத்தில் பிழைகளை திருத்திக் கொள்ளலாம்.

அடுத்து பிணீஸீபீஷ்க்ஷீவீtவீஸீரீ ளிசிஸி வந்து இருக்கிறது. அது நாம் எழுதியவுடன் தட்டச்சு பிரதியாக மாறும். இன்றும் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அதை பயன்படுத்தும் நிலைக்கு நம்மை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கே: நீங்கள் வெளியிட்டுள்ள அமுதம் என்கிற மென்பொருளைப் பற்றி சொல்லுங்கள்

இது விண்டோஸ்95 முதல் விண்டோஸ் விஸ்டா வரையிலுள்ள ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் வேலை செய்யக்கூடியது. டாப் 20, டாப் 6 மற்றும் டைப்ரைட்டிங் 5 என 31 தமிழ் எழுத்து உருக்கள் உள்ளன. தமிழ் 99 டைப்ரைட்டர் மற்றும் டிரான்ஸ்லிட்டரெஷன் விசைமுறைகள், ஆத்திச்சூடி ஒலி, ஒளி விளக்கம், திருக்குறளின் 1330 குறளும், வண்ண கிளிப் ஆர்ட் 250 படங்களும், கணினியில் தமிழை உள்ளீடு செய்யும் விளக்கமுறையை இந்த மென் பொருளுடன் புத்தகமாக இணைத்துள்ளோம்.

Pin It