H1N1 இன்புளூயன்சா வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளிசுரமே பன்றிக் காய்ச்சல். ஹோமியோபதி அணுகுமுறையில் பன்றிசுரம் என்பது முற்றிலும் புதியதொரு நோயல்ல. 1918லும் 1957லும் முறையே அதிகளவில் பரவிய ஸ்பானிஷ்ப்ளு, ஆசியன் ப்ளு என்ற பெயர்களைக் கொண்ட கொள்ளை நோயே தற்போது ஸ்வைன் ப்ளூ எனப்படுகிறது.

       1918களிலே இந்த Flu Epidemicஐ கட்டுப்படுத்துவதில் ஹோமியோபதி மருந்துகள் பெரும்பங்காற்றியுள்ளன. இதனை டியூர்குலர் மியாச வகை நோயாக ஹோமியோபதி மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் கொள்ளை நோய்களும், தொற்றுநோய்களும் பரவி அச்சுறுத்திய காலங்களில் எல்லாம் அவற்றை முறியடித்து மனித குலத்தைக் காப்பதில் ஹோமியோபதி மருத்துவர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

       பிரான்சில் காலரா பரவியபோது காம்போரா, குப்ரம்மெட், வெராட்ரம், ஆல்பம் போன்ற ஹோமியோபதி மருந்துகள் மூலம் டாக்டர் ஹானிமனும் அவரது சகாக்களும் காலராவை முழுவீச்சில் கட்டுப்படுத்தினர். அப்போது ஆங்கில மருத்துவத்தை நாடியவர்களில் 85 சதவீதத்தினர் பலியாயினர் என்பதும் ஹோமியோபதி மருத்துவத்தை நாடியவர்களில் 85 சதவீதத்தினர் உயிர் பிழைத்தனர் என்பதும் சரித்திரம். ஹோமியோ மருத்தவத்தின் தந்தை டாக்டர். ஹானிமன் காலத்திலேயே Typhus சுரத்துக்கு பிரையோனியா, ரஸ்டாக்ஸ் மருந்துகளும், Scarlet Feverக்கு Belladonna என்ற மருந்தும், Eruptive Feverக்கு அகோனைட் என்ற மருந்தும் தடுப்பு மருந்துகளாகப் பயன்பட்டு வெற்றிகளைக் குவித்துள்ளன.

       1918 Flue Epidemic அமெரிக்காவில் ஏற்பட்டபோது ஆங்கில மருத்துவசிகிச்சை பெற்றவர்களில் மரணவிகிதம் 30 சதவீதம் என்றும் ஹோமியோபதி சிகிச்சை பெற்றவர்களின் மரண விகிதம் 1 சதவீதம் என்றும் Homeopathic Medical Society of the District of Columbia அறிக்கை மற்றும் பல ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. ஹோமியோபதி சிகிச்சை பெற்ற 1500 நோயாளிகளில் 1485 நோயாளிகள் முழுநலம் அடைந்துள்ளனர்.

       ‘ஓகியோ’ பகுதியில் National Homoeopathic Hospitalல் சேர்க்கப்பட்ட 1000 நோயாளிகளில் ஹோமியோ சிகிச்சை பெற்ற ஒருவர்கூட மரணம் அடையவில்லை. 100 சதவீதம் வெற்றி. சிகாகோவை சேர்ந்த Dr.Frank Wieland M.D., அவர்கள் 800 தொழிலாளர்களுக்கு ஹோமியோபதியிலுள்ள ஜெல்சிமியம் எனும் ஒரே ஒரு மருந்தினை மட்டும் அளித்து, எந்தவிதத் தடுப்பூசிகளும் போடப்படாமல் 98 சதவீதம் வெற்றிபெற்றதாகக் கூறியுள்ளனர். ஓகியோ மாகாணத்தில் அலோபதி சிகிச்சை பெற்ற 24000 பேர்களில் 28.2 சதம் இறப்பு ஏற்பட்டதாகவும் ஹோமியோபதி சிகிச்சை பெற்ற 26000 நோயாளிகளில் 1 சதம் இறப்பு ஏற்பட்டதாகவும், கனெக்டிகட் பகுதியில் ஹோமியோ சிகிச்சை பெற்ற 6602 நோயாளிகளில் 6547 பேர்கள் முழுகுணமடைந்தனர் என்றும் மரணவிகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவு என்றும் அமெரிக்காவில் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

       1996ல் டில்லியில் ‘டெங்குசுரம்’ பரவியபோது டில்லி ஹோமியோபதி மருத்துவக் கவுன்சில் அரசின் ஆலோசனைப்படி இந்நோயை ஹோமியோபதி மருந்துகளைக் கொண்டு குணப்படுத்தியது (ஆதாரம்: www.delhihomoeo.com/php/treatment/dengue-pre.htm) ஆந்திர அரசு மூளை சுரத்திற்கு ஹோமியோ மருந்தை தடுப்பு மருந்தாக 10 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தியது. சிக்குன்குனியா பரவியபோது ஆந்திர அரசும், கேரள அரசும் ஹோமியோபதி மருந்துகள் மூலம் தடுக்க, சிகிச்சையளிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டன. தமிழகத்திலும் சிக்குன்குனியா பரவியபோது அரசு மருத்துவமனைகளிலுள்ள ஹோமியோபதி பிரிவுகளிலும் தனியாக ஹோமியோபதி மருத்துவமனைகளிலும் மக்கள் குவிந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஹோமியோபதி மருந்துகள் பக்கவிளைவுகளின்றி பெருமளவு நிவாரணமும் நலமும் வழங்கின.

       நோய்க்குக் காரணம் நோய்க்கிருமிகள் மட்டுமே என்று ஹோமியோபதி ஒப்புக்கொள்வதில்லை. நோய் உண்டாக எத்தனையோ காரணிகள் உள்ளன. மனநிலை, உணர்ச்சிகள், துயரங்கள், வெற்றிதோல்விகள், வறுமை, வளமை, தொழில், வீடு, உணவு, பருவநிலை ஈரம், மழை, பணி.. என்று மனிதனின் உள்ளும் புறமும் எண்ணற்ற காரணிகள் உள்ளன. நோய்க்கு ஆட்படும் தன்மை என்றும், நோயைத் தூண்டும் காரணிகள் என்றும் ஹோமியோபதி பகுத்துள்ளது.

       இத்தகைய தனித்தன்மை கொண்ட பார்வையால் தான் கிருமிகள் ஆக்ரமிப்பால் உண்டாவதாகக் கூறப்படும் டைபாய்டு, மலேரியா, டிபி போன்ற நோய்களை Antibiotics இல்லாமலேயே ஹோமியோபதி குணப்படுத்துகிறது. வெறுமனே கிருமிகளை விரட்டும் பணியை மட்டும் செய்துவிட்டு மீண்டும் மீண்டும் மனிதனை நோய்க்கு ஆளாக்கும் முறை ஹோமியோபதி அல்ல. உடலை நோய்க்கிருமிகள் வாழ இடமளிக்காத நல் உடலாக மாற்றி ஆரோக்கியம் அளிக்கிறது ஹோமியோபதி.

       ஹோமியோபதியில் ‘Genus Epidemics’ என்ற கோட்பாட்டின்படி தடுப்புமருந்துகள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொள்ளை நோய் போன்று தாக்குதல் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களிடம் காணப்படும் பெரும்பாலான பொதுக்குறிகள் அடிப்படையில் மருந்துத் தேர்வு செய்யப்படும். இம்மருந்து நோயுற்ற மக்களுக்கு மட்டுமின்றி நோய்பரவிய பகுதியிலுள்ள (இதுவரை நோயினால் பாதிக்கப்படாத) மற்ற பொதுமக்களுக்கும் தடுப்பு மருந்தாக வழங்கப்படும். இம்மருந்து உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து Secondary curative actionஐ உருவாக்குகிறது.

       பன்றிக்காய்ச்சல் ஓர் உயிர்க் கொல்லி நோய் அல்ல. பின் மரணம் ஏன்? நோய் பாதிப்பின் போது ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு, மூச்சுத்திணறல், சளிக்கட்டு ஆகியவற்றை முறையாகக் கையாளாததாலேயே மரணம் ஏற்படுகிறது. இந்த நோய் தொற்று, காற்றின் மூலம் பரவுவதாக கூறப்பட்டாலும், ஹோமியோ பார்வையில் உயிராற்றல் பலவீனமுள்ள மனிதர்களையே தாக்கும். எனவே உயிராற்றல் நலிவை போக்கி நோய் எதிர்ப்புத் திறனை வலுவடையச் செய்யும் ஹோமியோ மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நோய் தொற்று முறியடிக்கப்படும் என்பதை ஹோமியோபதி தன் வரலாறு நெடுகிலும் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

       மேலும், ஹோமியோபதி மருத்துவமானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய அதிநவீன மருத்துவமுறை ஆகும். இதனை இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் அங்கீகரித்துச் சட்டமியற்றி உள்ளன. அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கவுன்சில்களில் பதிவு பெற்ற பல்லாயிரக்கணக்கான மருத்துவர்கள் எல்லா ஊர்களிலும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகள் அமைத்தும் மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர். உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் ஹோமியோபதி மருத்துவர்கள் உள்ளனர். ஹோமியோபதியில் உலகறிந்த சமகால மேதைகள் பலர் இந்தியாவில் உள்ளனர்.

       ஹோமியோபதி மருத்துவத்தில் மட்டுமின்றி நமது மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி, இயற்கை மூலிகை மருத்துவம் போன்ற முறைகளிலும் பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வரும் முன் தடுக்கவும் வந்தபின் குணப்படுத்தவும் உரிய சிகிச்சை வழிமுறைகள் உள்ளன.

       மத்திய மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சகம் உரிய ஆய்வுகளுக்குப்பின் Arsenicum Album 30c என்ற மருந்தினை பன்றிக்காய்ச்சலைத் தடுப்பதற்கான ஹோமியோபதி மருந்தாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது. கேரள, மேற்குவங்க அரசுகள் இதனை நடைமுறைப்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் அரசின் ஏற்பாட்டின்படி ஹோமியோபதி ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன.

       இந்நிலையில் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க விலை உயர்ந்த, பக்கவிளைவுகளுக்கான சாத்தியமுள்ள தடுப்பூசிகளை நிறுத்திவிட்டு மத்தியரசு வழிகாட்டியுள்ள ஹோமியோ தடுப்பு மருந்தினையும், மாநில ஹோமியோ மருத்துவக் கவுன்சில் ஆலோசனையின்படி சிகிச்சை மருந்துகளையும் தமிழகஅரசு முழுவீச்சில் பயன்படுத்தி போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து மக்களின் உயிர்காக்க முன்வர வேண்டும். பொது மக்கள் ஹோமியோபதி மருத்துவர்களை நாடி இந்நோய் குறித்து ஆலோசனையும் தடுப்பு மருந்துகளும் சிறப்பு சிகிச்சைகளும் பெறலாம்.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It