டெல்லியில் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சமஸ் கிருதப் பயிற்சிப் பள்ளி ஒன்று நடைபெறுகிறது. இதில் பார்ப்பனர்களைத் தவிர வேறு,எந்தப் பிரிவினரும் அனுமதிப்பது கிடையாது. இந்த பார்ப்பன தனியார் நிறுவனத்துக்கு, மத்திய அரசு ரூ.5 கோடி நிதி வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் அய்க்கிய ஜனதா தள உறுப்பினர் சரத்யாதவ் இதை எழுப்பி தனது கண்டனத்தைத் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி மறுத்து, சாதி வெறியோடு செயல்படும் தனியார் பள்ளிக்கு,மத்திய அரசு நிதியளித்தது ஏன் என்று சரத்யாதவ் கேட்டார். இதற்கு பதிலளித்த மத்திய மனித வளத் துறை அமைச்சர் கபில்சிபல் ஒரே தவணையில் ஒரு முறை மட்டும் ரூ.5 கோடி வழங்கப்பட்டது என்றும், தொடர்ந்து ஆண்டு தோறும் வழங்கப்படவில்லை என்றும் பதில் கூறியிருக்கிறார்.

வாஜ்பாய் ஆட்சி சமஸ்கிருதத்தைப் பரப்ப ஏராளமான நிதி ஒதுக்கீடு செய்தது. காங்கிரசும், அதே பார்ப்பன வழியில் பார்ப்பனர்களுக்கு தாராளமாக சலுகைகளை வாரி வழங்குகிறது.

.
-பெரியார் முழக்கம் செய்தியாளர்

 

Pin It